
காயம்
2வது டெஸ்டின் 3ம் நாள் அட்டத்தின் போது சுப்மன் கில் ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் மேற்கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேனியல் லாவ்ரன்ஸ் அடித்த பந்து சுப்மன் கில்லின் இடது கையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது.

பிசிசிஐ அறிவிப்பு
இந்நிலையில் 4ம் நாள் ஆட்டமான இன்று சுப்மன் கில் பங்கு பெற மாட்டார் என பிசிசிஐ ட்வீட் செய்திருந்தது. இவர் 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டும், 2வது இன்னிங்சில் 16 ரன்னும் அடித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ஃபீல்டிங் செய்து வருகிறார்.

பின்னடவை
இங்கிலாந்து தொடரில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் 3வது வீரர் சுப்மன் கில் ஆகும். இதற்கு முன்னர் நட்சத்திர வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் புஜாரா ஆகியோர் சமீபத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் காயம் சரியாகி போட்டியில் மீண்டும் பங்குபெற்றனர்.

ஆஸ்திரேலிய தொடர்
இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய தொடரிலும் அடுத்தடுத்து இந்திய அணி வீரர்கள் காயம் பட்டு வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை வென்று அசத்தியது. குறிப்பாக சுப்மன் கில் இறுதி டெஸ்டில் 91 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழி வகுத்தார்.


Click it and Unblock the Notifications











