Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் மீது அவ்வளவு பாசமா? சொந்த செலவில் செய்த காரியம்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகும் பொருட்டு, நான்கு முதல் ஐந்து நெட் பவுலர்களை சொந்த செலவில் அழைத்துச் செல்ல இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் முடிவு செய்துள்ளார். இதற்கான அனைத்து செலவுகளையும் அவரே ஏற்கவுள்ளார்.

இது தொடர்பாக வெளியாக தகவலின் படி, இந்த பந்துவீச்சாளர்கள் கில்லுக்கு மட்டுமே வலைப்பயிற்சியில் பந்துவீசுவார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வீரர் ஒருவர் தனது சொந்த செலவில் நெட் பவுலர்களை வெளிநாட்டுத் தொடருக்கு அழைத்துச் செல்வது இதுவே முதல்முறையாகும். கில் அக்டோபர் 23 அல்லது 24 ஆம் தேதி நியூசிலாந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shubman Gill

முன்னதாக, அக்டோபர் 18-ஆம் தேதி முல்லன்பூரில் சத்தீஸ்கருக்கு எதிராகத் தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்காக கில் விளையாட உள்ளார். ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியின் டெஸ்ட் போட்டிகளை அவர் தவிர்க்கிறார்.

IND vs WI: 5வது டி20யில் புவனேஸ்வர் குமார் சேர்ப்பு.. ஆர்ஸ்தீப் காயம் காரணமாக பிசிசிஐ நடவடிக்கை

IND vs WI: 5வது டி20யில் புவனேஸ்வர் குமார் சேர்ப்பு.. ஆர்ஸ்தீப் காயம் காரணமாக பிசிசிஐ நடவடிக்கை

இருப்பினும், ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்புகளுக்காக அவர் அணியுடன் இணையவுள்ளார். இந்தியாவில் இருந்து நியூசிலாந்து பயணிப்பது அதிக செலவு பிடிக்கும் ஒன்றாக இருந்தாலும், டெஸ்ட் தொடருக்காக மிகச் சிறந்த முறையில் தயாராக வேண்டும் என்பதில் கில் உறுதியாக உள்ளார்.

பிசிசிஐ பொதுவாக நெட் பவுலர்களை ஏற்பாடு செய்யும் என்றாலும், தனது ஆட்டத்தின் குறிப்பிட்ட நுணுக்கங்களை மேம்படுத்த கில் இந்த தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் மற்றும் குளிர்ந்த வானிலை ஆகியவை இந்திய துணைக் கண்டத்தின் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டவை.

IND vs NZ: 21 வயதான அதிரடி விக்கெட் கீப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்பு

Also Read

IND vs NZ: 21 வயதான அதிரடி விக்கெட் கீப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்பு

இத்தகைய சவாலான சூழலை எதிர்கொள்ள இந்தியாவிலிருந்து சிறப்பு நெட் பவுலர்களை அழைத்துச் செல்வதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் மீதான தனது தீவிர அர்ப்பணிப்பை சுப்மன் கில் நிரூபித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால், அதற்கு நியூசிலாந்து டெஸ்ட் வெற்றி முக்கியம். நியூசிலாந்தில் இந்தியா வெல்ல வேண்டும் என்றால் கேப்டனாக கில் ரன்கள் சேர்க்க வேண்டும்.

Story first published: Friday, October 16, 2026, 23:47 [IST]
Other articles published on Oct 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+