Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 36 ரன்.. என்னால முடியலை.. ஆஸி. டெஸ்ட் தொடரில் தூக்க மாத்திரை சாப்பிட்ட இளம் வீரர்!

மும்பை : கடினமான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது தன் அறிமுகப் போட்டிக்கு முந்தைய நாள் தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறி இருக்கிறார் இளம் வீரர் ஷுப்மன் கில்.

அவர் அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு அடுத்த போட்டியில் அறிமுகம் ஆனார்.

மோசமான தோல்விக்கு பின் தான் அறிமுகம் ஆக இருந்த நிலையில் அவரால் அதற்கு முந்தைய தினம் தூங்க முடியவில்லை என கூறி இருக்கிறார்.

அடிலெய்டு தோல்வி

அடிலெய்டு தோல்வி

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் சுமார் 50 ரன்கள் முன்னிலை பெற்ற போதும் இரண்டாம் இன்னிங்க்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்தப் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது.

கில் எடுத்த முடிவு

கில் எடுத்த முடிவு

அந்த தோல்வியால் அதிர்ச்சியில் இருந்த இளம் வீரர் ஷுப்மன் கில், இந்த தோல்வியை யாரும் நினைவில் வைத்து இருக்கக் கூடாது என முடிவு எடுத்துள்ளார். ப்ரித்வி ஷா முதல் டெஸ்டில் மோசமாக ஆடியதை அடுத்து ஷுப்மன் கில்லுக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் அணியில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

தான் அறிமுகம் ஆக போட்டிக்கு முந்தைய தினம் தன்னால் தூங்க முடியவில்லை என அவர் கூறி உள்ளார். இதை அடுத்து அவர் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டே தூங்கி இருக்கிறார். அடுத்த நாள் அவர் தன் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

கவனம்

கவனம்

இந்தியா முதலில் பீல்டிங் செய்ததால் தன்னால் தான் அறிமுகம் ஆகி விட்டோம் என்பதை அப்போது உணர முடியவில்லை. ஆனால், நாளின் கடைசி நிமடங்களில் தான் ஆடிய 10 - 12 பந்துகளின் போது தான் தன்னால் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தான் ஆடுவதை உணர முடிந்ததாகவும், அப்போது தனக்கு தானே கவனமாக இருக்க வேண்டும் என கூறிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

Story first published: Thursday, January 28, 2021, 21:27 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+