Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2023 - அதிக ரன்கள் அடித்த விரர்கள்? அதிக சிக்சர் அடித்த வீரர்.. முழு பட்டியல் இதோ

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் பொதுவாக இந்தத் தொடர் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.

மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்த தொடர் மிகப் பெரிய வெற்றியையும் மறக்க முடியாத அனுபவத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கும். எப்படியோ இந்தியாவுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்தது மகிழ்ச்சி தான்.

shubman gill tops no 1 position in Most runs by a batsman in asia cup 2023

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 6 போட்டிகளில் விளையாடி 302 ரன்களை குவித்திருக்கிறார். அதிகபட்சமாக 121 ரன்கள் ஆகும். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் பிடித்திருக்கிறார். அவர் 6 போட்டிகளில் விளையாடி 270 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும். இதேபோன்று மூன்றாவது இடத்தில் சமரவிக்ரமா பிடித்திருக்கிறார். அவர் ஆறு போட்டியில் விளையாடும் 215 ரன்கள் எடுத்திருக்கிறார். நான்காவது இடத்தில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பிடித்திருக்கிறார்.

அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 207 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 151 ரன்கள் நேபாளுக்கு எதிராக அவர் அடித்து இருந்தார். ஐந்தாவது இடத்தில் ரிஸ்வான் 5 போட்டிகளில் விளையாடி 195 ரன்கள் ஆறாவது இடத்தில் ரோகித் சர்மா ஆறு போட்டிகளில் விளையாடி 194 ரன்கள் அடித்து இருந்தார்கள்.இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி ஐந்து போட்டிகளில் விளையாடி 129 ரன்கள் எடுத்து 17 வது இடத்தில் இருக்கிறார்.

கேஎல் ராகுல் நான்கு போட்டிகள் விளையாடி 169 ரன்கள் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். டாப் 10 இடத்தில் இரண்டு இந்தியர்கள் மட்டுமே இருந்தார்கள்.ஆசிய கோப்பை போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். அவர் 11 சிக்சர்கள் அடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் இப்திகார் அகமது ஆறு சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், கில் ஆறு சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதில் விராட் கோலி 3 சிக்ஸர்கள் அடித்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

Story first published: Monday, September 18, 2023, 16:47 [IST]
Other articles published on Sep 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+