Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது வெறும் கழுத்து வலி இல்லை.. சுப்மன் கில்லுக்கு நரம்பில் சிக்கல்.. 2 மாதம் விளையட முடியாது

மும்பை: இந்திய அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுப்மன் கில்லிற்கு ஏற்பட்டுள்ள கழுத்து வலி எதிர்பார்த்ததை விடத் தீவிரமாக மாறி உள்ளது. நரம்பு சார்ந்த பிரச்சனை காரணமாக, அவர் 2025-ம் ஆண்டின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதமே அவர் மீண்டும் களத்திற்குத் திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைப்பட்ட காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் அவர் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார்.

கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, சுப்மன் கில் கழுத்து வலியால் அவதிப்பட்டார். வலி தாங்க முடியாமல் வெறும் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் அவர் "ரிட்டயர்ட் ஹர்ட்" முறையில் வெளியேறினார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Shubman Gill Undergoes Injection Treatment Star Player Likely to miss South Africa ODI T20 series Due to Neck Injury

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, சுப்மன் கில்லிற்கு நரம்பு சார்ந்த காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதற்காக அவர் மும்பையில் உள்ள பிரபல தண்டுவடச் சிகிச்சை நிபுணர் டாக்டர் அபய் நேனேவிடம் ஆலோசனை பெற்றார்.

காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், வலியைக் கட்டுப்படுத்தவும் சுப்மன் கில்லிற்கு ஊசி போடப்பட்டுள்ளது. பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்ட செய்தியின்படி, சுப்மன் கில் உடனடியாகப் பயிற்சிகளைத் தொடங்க முடியாது. அவருக்குக் கட்டாய ஓய்வு தேவைப்படுவதால், மறுவாழ்வுப் பயிற்சிகளை தொடங்குவதற்குச் சில காலம் ஆகும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என எதிலுமே சுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. எனவே, சுப்மன் கில்லை அவசரப்பட்டு களமிறக்கி ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை. அவர் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்பதே பிசிசிஐ-யின் நோக்கமாக உள்ளது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், 2026 ஜனவரி 11-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில்தான் சுப்மன் கில் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில்லின் மருத்துவ அறிக்கை பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 23, 2025, 10:22 [IST]
Other articles published on Nov 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+