Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் vs ராகுல் டிராவிட்: முதல் 32 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், சதம் அடித்த வீரர் யார்?

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் சதமாக விளாசி இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வப்போது கில் சதம் அடித்து ரன்களை சேர்த்தாலும் இன்னும் எதிர்காலத்திற்கான வீரர் என்ற பெயரை அவர் இன்னும் பெறவில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, போன்ற தொடர்களில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை கில் அடித்திருக்கிறார்.

Shubman Gill vs Rahul Dravid

இந்த நிலையில் கில்லுக்கு தற்போது பெரிய பதவி கிடைத்திருக்கிறது. இதில் அவர் சிறப்பாக செயல்படுவாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த தருணத்தில் தற்போது 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கில் முடித்திருக்கிறார். இதே கட்டத்தில் ராகுல் டிராவிட் 32 டெஸ்ட் போட்டிகளில் எவ்வாறு ரன்களை சேர்த்து இருக்கிறார் என்பதை தற்போது ஒப்பிட்டு பார்க்கலாம்.

32 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக கில் 1893 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி வெறும் 35 என்ற அளவிற்கு இருக்கின்றது
கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 இன்னிங்சில் 537 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 592 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 324 ரன்கள், பங்களாதேஷ்க்கு எதிராக 321 ரன்களும் அடித்திருக்கிறார்.

இதே கட்டத்தில் ராகுல் டிராவிட் 32 டெஸ்ட் போட்டிகளில் 2634 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் டிராவிட்டின் சராசரி 52 என்ற அளவில் அபாரமாக இருந்திருக்கிறது. முதல் 32 டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக டிராவிட் 560 ரன்களும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 452 ரன்களும், இலங்கைக்கு எதிராக 48 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் எதிராக 360 ரன்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 263 ரன்கள் அடித்திருக்கிறார்.

சதம் பொறுத்தவரை கில் முதல் 32 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதம் அடித்திருக்கிறார். இந்த ஐந்து சதத்தில், இரண்டு சதம் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராகவும் ஒரு சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கிடைத்திருக்கிறது. இதில் அதிகபட்ச ஸ்கோர் 128 ரன்கள் ஆகும். டிராவிட்டை பொறுத்தவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதம் அடித்து இருக்கிறார். இந்த ஆறு சதத்தில் மூன்று சதம் நியூசிலாந்துக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு சதமும் டிராவிட் அடித்திருக்கின்றார்.

இதில் டிராவிட்டின் அதிகபட்ச ஸ்கோர் 190 ரன்கள் ஆகும். தென்னாபிரிக்கா இங்கிலாந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முதல் 32 டெஸ்ட் போட்டிகளில் கில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரியாக 25 ரன்கள் அடித்திருக்கிறார். 21 இன்னிங்ஸில் மொத்தமாக 514 ரன்கள் அடித்துள்ளார். இதே கட்டத்தில் ராகுல் டிராவிட் இந்த நாடுகளில் முதல் 32 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டியில் ஆடி 785 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 71 என்ற அளவில் இருக்கின்றது. இப்படி அனைத்து நிலையிலும் கில்லை விட டிராவிட் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இந்த சூழலில் கில் தாம் எதிர்காலத்திற்கான வீரர் என்ற பெயரை பெற வேண்டும் என்றால் சிறப்பாக விளையாட வேண்டும்.

Story first published: Sunday, June 8, 2025, 10:39 [IST]
Other articles published on Jun 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+