Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சுப்மன் கில்லுக்கு சோதனை.. பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்”.. முன்னாள் இலங்கை வீரர் ஹஷன் பேச்சு

மும்பை: இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. இந்த தொடர் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு உண்மையான அக்னிப்பரீட்சையாக இருக்கும் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஹஷன் திலகரத்னே தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வரும் சுப்மன் கில், கேப்டனாக 9 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்களுடன் 82.76 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். ஆனால், இது இலங்கையில் அவர் விளையாடவுள்ள முதல் டெஸ்ட் தொடர். இங்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்கள் இருக்கும் என்பதால் சுப்மன் கில் எப்படி அதை எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Shubman Gill will be tested against Sri Lankan spin pitches says Hashan Tillakaratne

இதை சுட்டிக் காட்டி பேசிய ஹஷன் திலகரத்னே, "சுப்மன் கில் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நுட்ப ரீதியாக (technically) அவர் மிகவும் சிறப்பாக ஆடுகிறார். நல்ல பேட்டிங் ஆடுகளங்களில் அழகாக விளையாடுகிறார். ஆனால், சுழற்பந்துக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்கள் அவருக்கு உண்மையான சோதனையாக இருக்கும். இந்தச் சூழலில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்" என்று கூறினார்.

இலங்கை டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விலகிய பும்ரா குறித்துப் பேசிய திலகரத்னே, "பும்ரா இல்லாதது இலங்கை அணிக்கு நல்ல செய்திதான். அவர் இன்றைய உலக கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவரது இல்லாதது இலங்கைக்கு கூடுதல் பலம். அதே நேரத்தில், இந்திய அணியை நாம் சாதாரணமாக எடைபோட முடியாது. அவர்களிடம் இன்னும் சிறந்த வீரர்கள் உள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

சிஎஸ்கே-வில் பந்துவீச வாய்ப்பு தரலை.. அதிருப்தியில் வெளியேற முடிவு செய்த சிவம் துபே.. பின்னணி தகவல்

சிஎஸ்கே-வில் பந்துவீச வாய்ப்பு தரலை.. அதிருப்தியில் வெளியேற முடிவு செய்த சிவம் துபே.. பின்னணி தகவல்

மேலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை இலங்கை அணி குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் எச்சரித்த ஹஷன் திலகரத்னே, "இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. குறிப்பாக, ரவீந்திர ஜடேஜா தனது வேகம், பந்துவீச்சு வேறுபாடுகள் மற்றும் அனுபவத்தின் மூலம் இலங்கை மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்" என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, August 7, 2026, 22:49 [IST]
Other articles published on Aug 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+