For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மன் கில் vs ரிஷப் பண்ட்.. இருவரில் யார் பணக்கார வீரர்? யார் காட்டில் பண மழை கொட்டுகிறது?

மும்பை: ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில், நியமிக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்த நிலையில், அணியில் ரிஷப் பண்ட் உள்ள நிலையில், அவருக்கு வாய்ப்பு இருக்காது என தெரிகிறது.

இந்த நிலையில், கில் மற்றும் பண்ட் என இரண்டு பேரில் யார் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள், யாருக்கு அதிக Brand value இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அணியின் 25 வயது இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில், மைதானத்தில் மட்டுமல்லாமல், பிராண்ட் உலகிலும் தனது மதிப்பை உயர்த்தி வருகிறார்.

IPL 2025 India cricket team Shumban Gill Rishabh Pant

2024ஆம் ஆண்டு கில்லின் சொத்து மதிப்பு சுமார் 34 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான இளம் விளையாட்டு வீரர்களில் ஒருவராக விளங்கும் கில், ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 16.50 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். மேலும், பிசிசிஐயின் 2024-25 மத்திய ஒப்பந்தத்தில் ஏ கிரேடு பிரிவில் தொடர்ந்து இடம்பெற்று, ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் கில்லுக்கு, நைக், ஜேபிஎல், ஜில்லெட், கோகோ-கோலா, பீட்ஸ் பை ட்ரே, எம்ஆர்எஃப், சியாட், கேசியோ, டாடா கேபிடல், மை11 சர்க்கிள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிராண்ட்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 50-60 லட்சம் ரூபாய் வசூலிக்கும் அவர், எம்ஆர்எஃப் ஒப்பந்தத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பிரையன் லாரா போன்ற உலக அளவிலான வீரர்களுடன் இணைந்துள்ளார்.

11 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட கில், பஞ்சாப்பில் ஆடம்பர வீடு, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட பிரமாண்ட வாகனங்களுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்.மறுபுறம், இந்தியாவின் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இளம் கிரிக்கெட் வீரர்களில் மிகவும் செல்வந்தராக உள்ளார்.

ஐபிஎல் 2025 ஏலத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை 27 கோடி ரூபாய்க்கு வாங்கி, ஐபிஎல் வரலாற்றில் மிக உயர்ந்த தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பிசிசிஐயின் 2024-25 ஒப்பந்தத்தில் ஏ கிரேடு பிரிவுக்கு முன்னேறிய பந்த், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதுதவிர, டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம், டி20 போட்டிக்கு 3 லட்சம் ரூபாய் என தனியாக ஊதியமும் கிடைக்கின்றன.

பந்த், ட்ரீம11, அடிடாஸ், எஸ்ஜி கிரிக்கெட், பூஸ்ட், கேட்பரி டெய்ரி மில்க், தம்ஸ் அப், கலிபோர்னியா ஆல்மண்ட்ஸ் உள்ளிட்ட 15 பிராண்ட்களுடன் இணைந்துள்ளார்.
ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 3.5-4 கோடி ரூபாய் வசூலிக்கும் ரிஷப் பண்ட்டின் பிராண்ட் மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அடுத்த ஆண்டு இது 30-40% உயரும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஆடி ஏ8, ஃபோர்டு மஸ்டாங் ஜிடி போன்ற ஆடம்பர கார்களையும், ரூர்கி மற்றும் டெல்லியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள வீடுகளையும் பண்ட் வைத்துள்ளார்.

Story first published: Wednesday, May 14, 2025, 10:21 [IST]
Other articles published on May 14, 2025
English summary
Shumban Gill or Rishabh Pant - Who is Wealthiest cricketer- comparison of brand values
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+