இந்திய டீமில் சேர்ந்துள்ள சித்தார்த் கவுலுக்கு, அந்த தகவல் எப்படி தெரிவிக்கப்பட்டது தெரியுமா?
டெல்லி: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் தொடக்கத்தில் இந்த ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் சித்தார்த் கவுல் என்ற புதிய வீரர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் சித்தார்த் கவுலுக்கு அந்த தகவல் மிகவும் வித்தியாசமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் ரஞ்சி கோப்பை போட்டிகளால் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த தகவலை கேட்டதும் அவர் கத்தி கொண்டாடி இருக்கிறார்.

சித்தார்த் கவுல்
சித்தார்த் கவுல் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 27 வயது நிரம்பிய இவர் 8 வருடமாக இந்திய அணியில் சேர்வதற்கு படாதபாடுபட்டு வந்தார். வலது கை பவுலிங் செய்யக்கூடிய இவர், நன்றாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இவர் மிகவும் குறைவான கிரிக்கெட் போட்டிகளே விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் முதலில் டெல்லி அணிக்காக விளையாடினார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை. அதன்பின் கொல்கத்தா அணிக்காக சில போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

கோஹ்லிக்கு மாற்று
இவர் 2008ல் கோஹ்லி அண்டர் 19 உலகக் கோப்பை விளையாடிய போது அவருடன் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால் அந்த தொடரிலும் அவருக்கு குறைவாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லியின் இடம் காலி ஆகி இருக்கிறது. அந்த இடத்தில் இந்த கோஹ்லியின் செல்லப்பிள்ளை சித்தார்த் கவுல் விளையாட வாய்ப்பு இருக்கிறது. சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் 5 வது இடத்திற்கு பிப்பும் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

லாஸ்ட் ஓவர்
சித்தார் கவுல் குறித்து தெரிந்த பலருக்கு அவரின் மிக முக்கியமான ஓவர் குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
2008 அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் மிக குறைவான போட்டிகளில் விளையாடி அவர் மிகவும் சிறப்பாக அதிக விக்கெட் எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த இறுதி போட்டியில் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது மிகவும் சிறப்பாக பந்து வீசி கடைசி பந்தில் ஒரு விக்கெட் எடுத்து அண்டர் 19 இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

தகவல் வந்தது எப்படி
தற்போது இவர் இந்திய அணியில் இணைந்த தகவல் தனக்கு எப்படி வந்தது என்று கூறியுள்ளார். அதில் ''நான் மாலை பஞ்சாப் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டு இருந்தேன். பிரேக் நேரம். அம்பயர் என்னை பார்த்து சிரித்தார். அவரிடம் என்ன என்று கேட்டேன். உடனே நீ இந்திய அணிக்கு தேர்வாகிவிட்டாய் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதன்பின் என்னால் அங்கு நிற்கவே முடியவில்லை'' என்று தன் சந்தோசத்தை குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications