Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு பேருதான் லக்.. இந்திய அணியில் விளையாடும் கோஹ்லியின் செல்லப்பிள்ளை!

டெல்லி: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் தொடக்கத்தில் இந்த ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சித்தார்த் கவுல் என்ற புதிய வீரர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

மிகவும் குறைவான கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கும் இவர் கோஹ்லியின் செல்லப்பிள்ளை என்று கூறப்படுகிறது.

சித்தார்த் கவுல்

சித்தார்த் கவுல்

சித்தார்த் கவுல் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 27 வயது நிரம்பிய இவர் 8 வருடமாக இந்திய அணியில் சேர்வதற்கு படாதபாடுபட்டு வந்தார். வலது கை பவுலிங் செய்யக்கூடிய இவர், நன்றாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். சிறந்த ஆல் ரவுண்டராக இவர் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் அணி

ஐபிஎல் அணி

இவர் மிகவும் குறைவான கிரிக்கெட் போட்டிகளே விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் முதலில் டெல்லி அணிக்காக விளையாடினார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை. அதன்பின் கொல்கத்தா அணிக்காக சில போட்டிகளில் மட்டும் விளையாடினார். அதேபோல் முதல்தர போட்டிகளும் மிகவும் குறைவாகவே விளையாடி இருக்கிறார்.

கோஹ்லியின் செல்லப்பிள்ளை

கோஹ்லியின் செல்லப்பிள்ளை

இவர் 2008ல் கோஹ்லி அண்டர் 19 உலகக் கோப்பை விளையாடிய போது அவருடன் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால் அந்த தொடரிலும் அவருக்கு குறைவாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் குறைவான போட்டிகளிலும் அவர் மிகவும் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட் எடுத்தார். இவர் விளையாடிய முதல் தர போட்டிகள் அனைத்திலும் அதிக விக்கெட் எடுத்துள்ளார்.

எந்த இடத்தில் விளையாடுவார்

எந்த இடத்தில் விளையாடுவார்

தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லியின் இடம் காலி ஆகி இருக்கிறது. அந்த இடத்தில் இந்த கோஹ்லியின் செல்லப்பிள்ளை சித்தார்த் கவுல் விளையாட வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் மனிஷ் பாண்டேவும் அந்த இடத்தில் விளையாட வாய்ப்பு உள்ளது. பல போட்டிகளில் வெறுமனே உட்கார வைக்கப்பட்ட இவர் இந்த தொடரில் விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

Story first published: Monday, November 27, 2017, 18:14 [IST]
Other articles published on Nov 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+