Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம கிண்டல்.. என்ன இந்திய வீரர்களை பார்த்து சித்தார்த் இப்படி சொல்லிட்டாரே.. ரொம்ப தைரியம்தான்!

சென்னை: விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சொன்ன கருத்துக்கு நடிகர் சித்தார்த் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

விவசாயிகள் போராட்டம்… கிரிக்கெட் பிரபலங்கள் ட்வீட்: காய்ச்சி எடுத்த இளம் தமிழ் நடிகர்!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது.பாடகி ரிஹானா, நடிகை மியா கலீபா, இயற்கை போராளி வாணீசா நகாட்டே, கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் இந்தியாவில் நடக்கும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக டிவிட் செய்தனர்.

இப்படி வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய பிரச்சனை குறித்து பேசியதை இந்திய அரசு விரும்பவில்லை. இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் வெளிநாட்டு பிரபலங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து கூறி இருந்தனர்.

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட வேண்டாம். இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.வெளிநாட்டு பிரச்சாரங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று இந்திய பிரபலங்கள் பதில் அளித்து வருகிறார்கள். சச்சின் டெண்டுல்கர் , ரோஹித் சர்மா, கோலி என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இது தொடர்பாக டிவிட் செய்தனர்.

வைரல்

வைரல்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் இப்படி கருத்து கூறினார்கள். இதற்காக #IndiaTogether #IndiaAgainstPropaganda என்ற டேக்குகளை பிரபலங்கள் பயன்படுத்தினார்கள்.இவர்களின் கருத்து பெரிய சர்ச்சையானது. கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் மக்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் சித்தார் டிவிட் செய்துள்ளார். அதில், இந்தியா சிறந்த நாடு. இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து ஆட விரும்புகிறது. ஆனால் நாம் நமது இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது. நாம் பவுலிங் செய்து, பேட்டிங் செய்து, பீல்டிங் செய்து சுயமாக நமக்கு உள்ளேயே ஆடிக்கொள்ள முடியும்.

5 நாட்கள்

5 நாட்கள்

5 நாட்களில் நாம் இதில் ஒரு நல்ல முடிவை எட்டுவோம். நாம் அனைத்து 11 வீரர்களோடு ஆடுவோம் என்று சித்தார்த் டிவிட் செய்தார். இந்த டிவிட் புரியவில்லை என்று பலர் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இவர் சச்சின் மற்றும் கோலியை கிண்டல் செய்யும் விதமாக இப்படி சித்தார்த் டிவிட் செய்துள்ளார்.

டிவிட்

டிவிட்

நாம் நமது இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சச்சின் சொன்னதையும், விவசாய போராட்டத்தில் நாம் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று கோலி கூறியதையும் மறைமுகமாக குறிப்பிட்டு சித்தார்த் கிண்டல் செய்துள்ளார். இவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

 சித்தார்த்

சித்தார்த்

அதோடு சித்தார்த் தனது டிவிட்டில் #IndiaTogether #IndiaAgainstPropaganda என்ற டேக்குகளை பயன்படுத்தி மறைமுகமாக இந்திய வீரர்களை தாக்கி உள்ளார். விவசாய போராட்டத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் பேசியது பெரிய சர்ச்சையானது . தற்போது சித்தார்த் இதை கிண்டல் செய்துள்ளார்.

Story first published: Friday, February 5, 2021, 17:33 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+