Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடிப்போன மைதானம்.. யார்யா இவரு இப்படி பவுலிங் போடுறாரு.. மிரள வைத்த வீரர்.. கோபம்தான் காரணம்!

பெங்களூர்: சையது முஷ்டாக் கோப்பை தொடரில் பஞ்சாப் வீரர் சித்தார்த் கவுல் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டிகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே பல்வேறு தரப்பு போட்டிகள் குழுக்களுக்கு உள்ளே நடந்துவிட்ட நிலையில் தற்போது கால் இறுதி ஆட்டங்கள் நடந்து வருகிறது.

எப்படி

எப்படி

இந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையில் கால் இறுதி சுற்று நடக்கிறது. இதில் பஞ்சாப் அணிக்காக சித்தார்த் கவுல் ஆடி வருகிறார். கடந்த லீக் ஆட்டங்களில் இவர் கடைசி ஓவரில் ஹாட் டிரிக் விக்கெட் எடுத்தார்.

போட்டி

போட்டி

இந்த நிலையில் இன்றும் தான் வீசி முதல் ஓவரிலேயே அதிரடி காட்டினார். இவர் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல் அவுட் ஆனார். அதன்பின் 4வது பந்தில் பவான் தேஷ் பாண்டே அவுட் ஆனார். இந்த ஓவரில் சித்தார்த் கவுல் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை.

 சித்தார்த் கவுல்

சித்தார்த் கவுல்

தொடர்ந்து சித்தார்த் கவுல் முதல் தர போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனாலும் இவருக்கு இந்திய அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஐபிஎல் தொடரில் இவர் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். ஆனால் அங்கும் இவருக்கு பெரிய வாய்ப்பு கிடைப்பது இல்லை.

திறமையான வீரர்

திறமையான வீரர்

இவர் திறமையான வீரராக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருகிறார். வரும் ஐபிஎல் தொடரிலும் இவருக்கு ஹைதராபாத் அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இதனால் கிடைத்த இடத்தில் எல்லாம் வாய்ப்பை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் அதிரடியாக ஆடி வருகிறார்.

Story first published: Tuesday, January 26, 2021, 14:14 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+