Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைவன் சற்குணம் அபார ஆட்டம்... மதுரைக்கு ஹாட்ரிக் வெற்றி... காஞ்சிக்கு 4வது தோல்வி!

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணி தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்தது.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின.

siechem madurai panthers wins over vb kanchi veerans in the tnpl

முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. தலைவன் சற்குணம் 40 பந்துகளில் ஒரு பவுண்டரி 7 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து அசத்தினார். டி ரோஹித் 32, கவுசிக் 27, அபிஷேக் தன்வர் 22 ரன்கள் எடுத்தனர். காஞ்சி அணியின் தீபன் லிங்கேஷ், ஆர். திவாகர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

அடுத்து விளையாடிய விபி காஞ்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. மதுரை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

புள்ளி பட்டியல்

விஷால் வைத்தியா 31, பாபா அபராஜித் 29, மோஹித் ஹரிஹரன் 34, சஞ்சய் யாதவ் 34 ரன்கள் எடுத்தனர். ஆனாலும், வெற்றி இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை/

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

இதன் மூலம், காஞ்சி அணி, தான் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த மதுரை, ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.

Story first published: Thursday, July 26, 2018, 10:38 [IST]
Other articles published on Jul 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+