Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னதான் தேர்வு செய்கிறார்களோ? இந்திய அணியை விமர்சிக்கும் நியூசிலாந்தின் சைமன் டவ்ல்

Simon Doull questions India's selection policy
வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு முறையை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவ்ல்.

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை இழந்து விட்டது. இந் நிலையில் இந்திய அணியின் தேர்வு முறையை நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவ்ல் விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் நாட்டின் பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பலவீனங்களை, மிடில் ஓவர்களில் எப்படி ஆட வேண்டும் என்பதை கண்டறிந்து விட்டார்கள் என்பது முதல் இரு ஒருநாள் போட்டிக்கு பிறகு தெளிவாக தெரிந்தது.

ஆனாலும் இந்திய அணியோ ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கியது. அவர்கள் நன்றாக ஆடக்கூடியவர்கள் என்றாலும் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாமே..

அவர் லெக் ஸ்பின்னர். மற்றவர்களை விட அவர் நன்றாக ஆடுகளங்களை பயன்படுத்தி இருக்கலாமே என்றார்.

Story first published: Thursday, January 30, 2014, 19:22 [IST]
Other articles published on Jan 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+