பெங்களூர் ஜெயிக்காதுன்னு சொல்றியா? கொன்னுடுவேன்… வர்ணனையாளரை மிரட்டிய ஆர்சிபி ரசிகர்
மும்பை:பெங்களூரு அணியின் தோல்வி குறித்து விமர்சித்த வர்ணனையாளர் சைமன் டவுலுக்கு ரசிகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியாவில் 2 வாரங்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் களைகட்டி வருகின்றன. அதில், விளையாடும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவிக்கிறது. பெங்களூரு அணி முதல் வெற்றியைப் பெறுமா என அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிபார்ப்புடன் இருக்கின்றனர்.

ரசிகர் மிரட்டல்
இந்நிலையில், அணியின் செயல்பாட்டை விமர்சித்த வர்ணனையாளருக்கு ரசிகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய ஐபிஎல் போட்டி வர்ணனையாளர் சைமன் டவுலுக்கு தான் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடும் விமர்சனம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தோல்வியை விமர்சனம் செய்துள்ளார். அதன் காரணமாகவே இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை செய்துவிடுவோம்
பெங்களூரு அணி குறித்து விமர்சனம் செய்தால் கொலை செய்துவிடுவோம் என அந்த அணியின் ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதை பேஸ்புக்கில் சைமன் டவுல் பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

ஒன்றும் பண்ணவில்லை
கொலை மிரட்டல் விடும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என தெரியவில்லை. இது வெறும் கிரிக்கெட் தான். அமைதியாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications