For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிங்கப்பூருக்கு கிடைத்த "பெருமை".. ஆர்சிபி அணியில் "சிங்கை சிங்கம்" - கோலி கொடுத்த வாய்ப்பு

ஷார்ஜா: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியில் ஒரு மிக முக்கிய மாற்றத்தை ஆர்சிபி மேற்கொண்டுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.24) நடைபெற்று வரும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்ய, பெங்களூரு தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஐபிஎல் 2021 தொடரில் இரண்டாம் பகுதியில், முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட தோனி ஆர்மி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று தனது 2வது போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை தற்போது 12 புள்ளிகள் பெற்றிருப்பதால், இன்னும் 2 போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம்.

Singaporean cricketer tim david debut in rcb against csk ipl 2021

எனவே, எந்தவித சிக்கலும் இன்றி, பிளே ஆஃப் முன்னேற, இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே முயற்சிக்கும். அதேசமயம், 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. ஸோ, பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க இந்த போட்டி பெங்களூருவுக்கு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக, கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, படுதோல்வி அடைந்த நிலையில், இன்று பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டு பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (c & wk), டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் மற்றும், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஆர்சிபி அணியில் இருக்கும் டிம் டேவிட் என்ற வீரர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். ஆல்ரவுண்டரான டிம் டேவிட், கரீபியன் பிரீமியர் லீகில் வெற்றிகரமாக விளையாடியவர். பவர் ஹிட்டரான இவருக்கு ஆர்சிபி அணியில் இன்று முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த டிம் டேவிட், அந்நாட்டுக்காக மொத்தம் 14 டி20 போட்டிகளில் பங்கேற்று 158.52 சராசரியுடன் 558 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன்களை நேபால், ஹாங்காங் உள்ளிட அணிகளுக்கு எதிராக அடித்துள்ளார்.

2018ம் ஆண்டு 2017-18 பிக் பாஷ் லீக் சீசனில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக தனது T20 கிரிக்கெட் வாழ்க்கையை டேவிட் தொடங்கினார். 2020-21 பிக் பாஷ் லீக் சீசனுக்காக, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் இணைந்தார். தொடக்க போட்டியில், 58 ரன்கள் விளாசிய டேவிட், அந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை அருமையான ஏற்றம் கண்டது. அதன் பலனாக இன்று ஆர்சிபி அணியில் அறிமுக ஆகியிருக்கிறார் இந்த சிங்கை சிங்கம்!

Story first published: Friday, September 24, 2021, 20:38 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
Singaporean cricketer tim david debut in rcb - டிம் டேவிட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+