லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 7 முதல் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றி உள்ள நிலையில், இந்த டெஸ்ட் முக்கியத்துவம் அற்ற போட்டியாக மாறி உள்ளது.
இந்தியா வென்றால், ஆறுதல் வெற்றியாக இருக்கும். இங்கிலாந்து வென்றால், இந்திய வீரர்கள், அணி நிர்வாகம் மேலும் சிக்கலுக்கு உள்ளாவார்கள்.

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகர் மிக் ஜாகர், ஓவல் டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் யாரும் சதம் அடித்தாலோ அல்லது ஒரு பந்துவீச்சாளர் 5 விக்கெட்கள் எடுத்தாலோ தான் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
மிக் ஜாகர் தான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் ரசிகன். இந்த தொடர் மக்களை கிரிக்கெட் குறித்து பேச வைத்துள்ளது. ஒவ்வொரு நல்ல சாதனையும் புதிய ரசிகர்களை, இளம் ரசிகர்களை அழைத்து வருகிறது. அது கிரிக்கெட்டுக்கு நல்லது என தெரிவித்தார்.
அதனால், ஐந்தாம் போட்டியின் போது அடிக்கும் ஒவ்வொரு சதம் அல்லது ஒரு பந்துவீச்சாளர் எடுக்கும் 5 விக்கெட்டுக்கும் 20000 யூரோ (16.75 லட்சம்) பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், அரை சதம், மூன்று விக்கெட்கள் எடுத்தால் 10000 யூரோ (8.37 லட்சம்) அளிக்க உள்ளதாக கூறியுள்ளார் மிக் ஜாகர்.