வாவ் அசத்தல்.. பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ள சச்சின் !
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இணைந்து பாடியுள்ள பாடல் வீடியோ வெளிவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பல்வேறு வேலைகளில் சச்சின் மிகவும் பிஷியாகிவிட்டார். கிரிக்கெட் உலகில் தடம் பதித்த சச்சின் தெண்டுல்கர் பாடகராக தனது புதிய இன்னிங்சை துவக்கியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரும் பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இணைந்து பாடியுள்ள பாடல் வீடியோ வெளிவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் இந்த ஒரு நிமிட வீடியோவில் கிரிக்கெட் சம்பந்தமான பாடலை சச்சின் பாடியுள்ளார். பாடலின் நடுவில் "சச்சின்...சச்சின்..." என ரசிகர்களின் குரலும் வருகிறது.
இந்த பாடல் குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், "எனக்கு இசை மிகவும் பிடித்த விஷயமாக இருந்தாலும், நான் பாடுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை. சோனு நிகாமும் மற்றவர்களும் இணைந்து என்னை பாட வைத்தனர்"என்று கூறினார். சோனு நிகாமிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications