Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குல்தீப் கழுத்தை பிடித்து கத்திய சிராஜ்.. டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த பரபர மோதல்?.. வைரலாகும் வீடியோ!

சென்னை: இந்திய அணியின் இளம் வீரர்கள் குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக ஆடி வருகிறது.முக்கியமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மிக அற்புதமாக அடி சென்னையை அதிர வைத்துக் கொண்டு இருக்கிறார்.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 200 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணியின் பவுலிங் இந்த போட்டியில் மிக மோசமாக இருந்தது.

பவுலிங்

பவுலிங்

இந்திய அணியில் எடுக்கப்பட்ட இஷாந்த் சர்மா, சுந்தர், நதீம் பெரிய அளவில் சிறப்பாக பவுலிங் செய்யவில்லை, இஷாந்த் சர்மா ரன் கொடுக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் கூட விக்கெட் எடுக்கும் அளவிற்கு இவர் பவுலிங் செய்யவில்லை. இந்திய அணி தற்போது சிராஜ், குல்தீப் இருவரையும் அதிகம் மிஸ் செய்கிறது.

வீடியோ

இந்திய அணியில் சிராஜ், குல்தீப் இருவரும் எடுக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் பார்மில் இருந்தும் கூட அணியில் எடுக்கப்படாதது விமர்சனத்தை சந்தித்து உள்ளது. இந்த நிலையில்தான் சிராஜ் - குல்தீப் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சண்டை

சண்டை

இந்திய அணி வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துவிட்டு திரும்பும் போது டிரெஸ்ஸிங் ரூமில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிராஜ் கோபமாக குல்தீப் கழுத்தை பிடித்து இழுத்துள்ளார். கோபமாக சிராஜ் குல்தீப்பிடம் எதோ சொல்வது இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால்

ஆனால்

அதேசமயம் இதை பார்த்தால் சீரியஸ் சண்டை போல இல்லை. இதை பார்க்க விளையாட்டு சண்டை போல இருக்கிறது. இதை எல்லாம் பெரிதுபடுத்த கூடாது என்று சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Saturday, February 6, 2021, 16:26 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+