For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உஷ் பேசாதே...உதடுகளில் விரல் வைத்து செய்யும் மேனரிசம் ....சிராஜ் புது விளக்கம்

லண்டன்: முகமது சிராஜ் விக்கெட் எடுத்த பிறகு காட்டும் எக்ஸ்பிரஷன் தான், இங்கிலாந்து தொடரின் ஹைலைட். இதற்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தாலும், ஆதரவும் இருக்கவே செய்கிறது.

Recommended Video

Mohammed Siraj-Led India Attack Bundle Out England for 120 | Oneindia Tamil

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முகமது சிராஜ் இங்கிலாந்து தொடரில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அவரது எக்ஸ்பிரஷன் சில பல கமெண்ட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

வாயை மூடிக்கிட்டு கிளம்பனும்

வாயை மூடிக்கிட்டு கிளம்பனும்

ஆம்! ஒவ்வொரு முறை அவர் விக்கெட் எடுக்கும் போதும், பேட்ஸ்மேன்களை நோக்கி "வாயை மூடிக்கிட்டு வெளியே போகணும்" என்பது போல செய்கை காண்பிக்கிறார் சிராஜ். ஒவ்வொரு முறை அவர் விக்கெட் எடுக்கும் போதும், இதனை செய்கிறார். எப்போதாவது ஒரு வீரருக்கு இதுபோல் செய்தால் ஓகே. ஆனால், தான் விக்கெட் கைப்பற்றும் எல்லா வீரருக்கும் இதே பாணியைத் தான் அவர் ஃபாலோ செய்து வருகிறார். அந்த செய்கையின் மூலம் அவர் சொல்ல வருவது 'shut and go' என்பதே. அவர் இப்படி செய்வது கூட பரவாயில்லை போல.. கேப்டன் என்கிற முறையில் விராட் கோலி இதனை குறைந்தபட்சம் கண்டிக்காமல் இருப்பது குறித்தும் சமூக தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிராஜ் போன்ற ஒரு திறன் வாய்ந்த பவுலர், தங்களது தொடக்க காலத்திலேயே கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போக வேண்டுமா? என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுகிறது.

இது தேவையா?

இது தேவையா?

இந்திய வீரரும், இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளருமாக பணிபுரியும் தினேஷ் கார்த்திக் கூட, "பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியப் பிறகு சிராஜ், ஆக்ரோஷமாக சில செய்கைகளைச் செய்தார். இது தேவையற்றது. சிராஜ் தற்போதுவரை ஒருசில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இது அவரின் துவக்கக் காலம்தான். போகப்போக, அனுபவம் கிடைத்த பிறகு, இதுபோன்ற செய்ய மாட்டார் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

இதுவே புதிய பாணி

இதுவே புதிய பாணி

இந்நிலையில், முகமது சிராஜ் தனது எக்ஸ்பிரஷனுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார். லார்ட்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அவரிடம் உதடுகளில் விரல் வைத்து சைகை செய்வது பற்றி கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது இந்த செய்கை என்னை வெறுப்பவர்களுக்கானது. ஏனென்றால் அவர்கள் என்னைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொன்னார்கள், என்னால் இதைச் செய்ய முடியாது, அதைச் செய்ய முடியாது என்றனர். அவர்களுக்கு நான் நேரடியாக பதில் அளிக்க விரும்பவில்லை. அதற்கு பதில், நான் எனது பந்துகளின் மூலம் பேச நினைத்தேன். இப்போது பேசுகிறேன். எனவே இது தான் எனது கொண்டாட்டத்தின் புதிய பாணி," என்று சிராஜ் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

முக்கியமானது

முக்கியமானது

நான்காவது வேகப்பந்து வீச்சாளருடன் விளையாடுவது அவசியமானது. ஏனென்றால் தொடக்கத்தில் நாங்கள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம், எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் திறம்பட தொடர்ந்து பந்துவீசினர். இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் இங்கிலாந்துக்கு வரும்போது, ​​நீங்கள் பல விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறீர்கள், ஆனால் இங்கு எங்கள் திட்டம் சீராக இருக்க வேண்டும். அதேசமயம், நாங்கள் தீர்மானித்த இடத்தில் பந்துவீச வேண்டும்" என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 15, 2021, 19:26 [IST]
Other articles published on Aug 15, 2021
English summary
siraj about finger on lips celebration - முகமது சிராஜ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+