எவ்வளவு பாசம்.. நடராஜனை காப்பாற்றுவதற்காக போராடிய சிராஜ்.. களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நடராஜனை காப்பாற்றுவதற்காக சக வீரர் சிராஜ் முயன்றது வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு தரமான பதிலடி கொடுத்துள்ளது.
இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டை இழந்த 369 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி 336 ரன்கள் எடுத்தது.

எப்படி
இந்திய அணி 250 ரன்களுக்கு அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர் அதிரடியால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு 336 ரன்கள் எடுத்தது. வாஷிங்க்டன் சுந்தர் 62 ரன்கள் ,
ஷரத்துல் தாக்கூர் 67 ரன்கள் எடுத்தனர். இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை இந்தியாவை விட 33 ரன்கள் முன்னிலை பெற்றது.

நடராஜன்
இந்த போட்டியில் கடைசில் பேட்ஸ்மேனாக நடராஜன் களமிறங்கினார். அதற்கு முன் களமிறங்கிய சிராஜ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ஆட்டத்தை அதிரடியாக
தொடங்கினார். நடராஜன் களமிறங்கிய பின் சிராஜ் அவருக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் காப்பாற்றி வந்தார்.

ஸ்டிரைக்
முடிந்த அளவு நடராஜனுக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் சிராஜ் பேட்டிங் செய்தார்.
நடராஜனை கஷ்டப்பட்டு சிராஜ் காப்பாற்றி வந்தார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அணியின் டெயில் எண்டர்கள் பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய பவுலர்கள் உடலை நோக்கி பந்தை வீசினார்கள்.இந்திய பவுலர்களை காயப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்து வீசினார்கள.

மோசமான பவுலிங்
நடராஜனை காயப்படுத்தும் விதத்தில் உடலை நோக்கி பந்தை வீசினார்கள். நடராஜன் வலைப்பயிற்சியில் பவுலிங் மட்டுமே செய்து வந்தார். இவர் கடந்த இரண்டு மாதமாக பேட்டிங் பயிற்சியே செய்யவில்லை . இதனால் இன்று பேட்டிங் செய்யும் போதே நடராஜன் திணறினார்.

திணறல்
இதனால் நடராஜனை காப்பாற்ற வேண்டும் என்று சிராஜ் முடிந்த அளவு ஸ்டிரைக் எடுத்தார். நடராஜன் காயம் அடைந்தால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக
இருக்கும். இதை தவிர்க்க வேண்டும் என்பதால் சிராஜ் இன்று மிகவும் பொறுப்பாக செயல்பட்டார். நடராஜனும் களத்தில் இருக்கும் போது காயம் அடைய கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.


Click it and Unblock the Notifications