Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வீரர்கள் கூட வரவில்லை.. பேட்டை வீசிவிட்டு ஓடி வந்த சிராஜ்.. ப்பா என்ன மனுஷன்.. செம சம்பவம்

சிட்னி: இன்று ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் அடிபட்ட போது இந்திய வீரர் முகமது சிராஜ் செய்த காரியம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் பயிற்சி ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 194 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் இன்று பும்ரா வீசிய பந்தில் தலை கலங்கி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பும்ரா அடித்த பந்து இவர் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.

காயம்

காயம்

பும்ரா 40 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது கேமரூன் கிரீன் பவுலிங் செய்தார். இதை பும்ரா வேகமாக அடிக்க அந்த பந்து கேமரூன் கிரீன் தலை மீது சென்று வேகமாக பட்டது. பல கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்து வேகமாக சென்று கேமரூன் கிரீன் தலையில் அடித்தது. இதில் கேமரூன் கிரீன் கலங்கி விழுந்து துடித்து போனார்.

வெளியேறினார்

வெளியேறினார்

இதன் காரணமாக ஆட்டத்தின் பாதியில் கேமரூன் வெளியேறினார். அதோடு இவருக்கு மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டுள்ளார். கேமரூன் கிரீன் கீழே விழுந்த போது அவரை தூக்குவதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் வேகமாக ஓடி வரவில்லை. நடுவரும் கூட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனார்.

சிராஜ்

சிராஜ்

ஆனால் ரன்னர் எண்டில் இருந்த முகமது சிராஜ் கொஞ்சம் கூட எதை பற்றியும் யோசிக்கவில்லை. வேகமாக தனது பேட்டை தூக்கி எறிந்துவிட்டு பவுலருக்கு அருகே ஓடினார். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வேகமாக ஓட கேமரூன் கிரீனை தாங்கி பிடித்தார்.

பிடித்தார்

பிடித்தார்

அதோடு கேமரூன் கிரீன் தலையை பிடித்துக் கொண்டு அவருக்கு உதவியாக நின்றார். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் சிராஜ் செய்த இந்த காரியம் பெரிய வைரலாகி உள்ளது. என்ன மனுஷன்யா இவர் என்று பலரும் சிராஜை பாராட்ட தொடங்கி உள்ளனர்.

Story first published: Friday, December 11, 2020, 19:06 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+