Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 நிமிடம்.. மொத்தமாக ஆட்டத்தை மாற்றிய ஒரு ஓவர்.. ஆஸி. வீரர்களை கலங்கடித்த சிராஜ்.. செம சம்பவம்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. நான்காவது டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் தற்போது ஆடி வரும் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இன்றைய நாள் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி ஒப்பனர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வார்னர் அதிரடியாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் மார்கஸ் ஹாரிஸும் 38 ரன்கள் எடுத்தார்.

சிராஜ்

சிராஜ்

இவர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்த பின் வலுவான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமையும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் வார்னர் விக்கெட்டை வாஷிங்க்டன் சுந்தர் எடுத்த பின் வரிசையாக ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழந்தது. முக்கியமாக சிராஜ் வீசிய 31வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது.

பவுலிங்

பவுலிங்

சிராஜ் வீசிய 31வது ஓவரின் 3வது பந்திலும் கடைசி பந்திலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. ஆஸ்திரேலியாவின் வலுவான மார்னஸ் 25 ரன்களுக்கும், மேத்யூ வேட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய சரிவை கொடுத்தது.

பவுலர்கள்

பவுலர்கள்

இந்திய அணியில் மூத்த பவுலர்கள் இல்லாத நிலையில் சிராஜ்தான் அணியின் பவுலிங் படையை வழி நடத்தி வருகிறார். முதல் இன்னிங்சில் இவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார்.

விக்கெட்

விக்கெட்

இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் சிராஜ் முக்கியமான இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஷமி அடிக்கடி காயம் அடைவதால் விரைவில் இவர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பை இழக்கலாம். இதனால் ஷமியின் இடத்தை சிராஜ் விரைவில் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

Story first published: Monday, January 18, 2021, 8:51 [IST]
Other articles published on Jan 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+