
அனைத்திலும் வெற்றி
குறிப்பாக, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அபாயகரமான அணியாக உருவாகி வருகிறது. ஆசிய மண்ணில் இதுவரை ரூட் தலைமையில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து, அனைத்துப் போட்டியிலும் வெற்றிப் பெற்றிருக்கிறது.

பிரமிக்க வைக்கும் ரூட்
ஆசிய மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித். 21 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி, அதில் 8ல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து, 17 போட்டிகளில் தலைமைத் தாங்கிய கிளைவ் லாயிட் 7 வெற்றிகளை பெற்றிருக்கிறார். இவர்களுக்கு அடுத்து, ரூட் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

உருமாறும் இங்கிலாந்து
அதேபோல், ஆசிய மண்ணில் தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வென்றிருக்கிறது. இதற்கு முன்னதாக, 2002-04 காலக்கட்டத்தில் ஆசியாவில் டெஸ்ட் தொடர்களில் விளையாடிய ஆஸ்திரேலியா, தொடர்ந்து ஆறு வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. சென்னையில் நடக்கவிருக்கும் அடுத்த டெஸ்ட் போட்டியையும் இங்கிலாந்து வெல்லும் பட்சத்தில் புதிய சரித்திரம் படைக்கும்.

4 வருடங்களில் முதன்முறை
குறிப்பாக, இந்தியாவில் நடந்த கடைசி 14 டெஸ்ட் போட்டிகளில், இப்போது தான் முதன்முறையாக இந்திய அணி இரு இன்னிங்ஸிலும் ஆல் அவுட்டாகியுள்ளது. இதற்குமுன், 2017ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா இரு இன்னிங்ஸிலும் ஆல் அவுட் ஆகியிருந்தது.


Click it and Unblock the Notifications