Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணியின் "சிம்பு".. வச்சுக்காதீங்க "வம்பு" - கோலியின் ஒரே "தெம்பு"

மும்பை: கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இப்போது ஐபிஎல் மீதல்ல. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் மீது தான். மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக ஒரு வீரர் இருக்கிறார். அவரைப் பற்றியே பார்க்கப் போகிறோம்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இதில் குறிப்பாக, முதன் முறையாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முழு பலம் பொருந்திய இந்திய அணி இங்கிலாந்து சென்றிருக்கிறது. ஸோ, எப்படியும் வெற்றிப் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் அணி நிர்வாகம் உள்ளது. ஆனால், அது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதுவும் இங்கிலாந்து ஆடுகளத்தில் வெற்றிப் பெறுவது என்றால்.. அதற்கு திறமையை தாண்டிய எக்ஸ்ட்ரா ஃபயர் வேண்டும். அப்படியொரு ஃபயர் தற்போதைய இந்திய அணியில் இருக்கிறது. அவர் பெயர் ரிஷப் பண்ட்.

பாய்ந்தால் புலி

பாய்ந்தால் புலி

பார்த்தால் அமைதியாக தெரிவார். ஆனால் பேச ஆரம்பித்தால்.. எதிரணி வீரர்கள் டென்ஷன் ஆகும் அளவுக்கு ஸ்டெம்ப் பின்னாடி நின்று கொண்டு அவர்களை இம்சை செய்து கொண்டிருப்பார். அதுபோல், எல்லா மேட்சிலும் இவர் அடிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அடித்தால் ஒவ்வொரு அடியும் இடி போன்று இருக்கும். ஒட்டுமொத்தமாக எப்போது களமிறங்கினாலும் அதிரடி என்பதால் இந்திய அணியின் சிம்புவாகிறார். பட், ஜோக்ஸ் அபார்ட்ஸ்... இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையாக மட்டுமில்லாமல், கேப்டன் விராட் கோலியின் தெம்பாகவும் இருக்கிறார் ரிஷப் பாண்ட்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

கடந்த ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப்பின் ஆட்டம் பயமறியாதது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 328 ரன்கள் சேஸிங்கில், அவர் அடித்த மேட்ச் வின்னிங் 89 ரன்கள் என்றென்றும் கிரிக்கெட்டின் ஆச்சர்யப் பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கும். தனது ஆக்ரோஷமான அதே ஃபார்மை, அதன் பிறகு இந்தியாவில் நந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், பண்ட் அப்படியே வெளிப்படுத்தினார்.

உஷார் மோட்

உஷார் மோட்

டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் சோபிக்காத மேட்சுகளில், ரிஷப் பண்ட் களமிறங்கும் வரை ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் எதிரணிகள், அவர் களமிறங்கிய பிறகு அசட்டுத் தைரியத்தில் பந்து வீச, அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பந்துகளை பொளப்பது ரிஷப்பின் சீக்ரெட் ஸ்டைல். இப்போது தான் மெல்ல மெல்ல எதிரணிகள், 'இந்த பையன் டேஞ்சர்' என்பதை உணர ஆரம்பித்துள்ளன. இவனை நிற்கவிட்டால், மேட்சை கொத்தோடு பிடுங்கி சென்றுவிடுவான் என்றறிந்து உஷார் மோடுக்கு வந்துள்ளனர்.

செம் ட்ரீட்

செம் ட்ரீட்

இதனால், நியூசிலாந்து அணியும் சரி... இங்கிலாந்து அணியும் சரி, மற்ற வீரர்களை காட்டிலும் இவருக்கென்று தனி செக் பாயிண்ட் வைத்திருப்பதாக தெரிகிறது. எதிரணி பவுலர்களும், ரிஷப்பிடம் சிக்காமல் இருக்க, அவரின் வீக் பாயிண்ட்ஸ்களை மனப்பாடம் செய்து வருகின்றனர். எது எப்படியோ.. ஐபிஎல் போனாலும், ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது என்பது உறுதி.

Story first published: Saturday, May 22, 2021, 20:35 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+