Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

48ல் 28…! தல தோனியை இதிலும் சாய்த்த ‘கிங்’ கோலி..! 8 ஆண்டுகளில் கிடுகிடு வளர்ச்சி, அசத்தல்..!

Recommended Video

Watch Video : Skipper kohli breaks former captain dhoni's captaincy record

கிங்ஸ்டன்: வெளிநாட்டு மைதானங்களில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற தல தோனியின் சாதனையை கிங் கோலி அடித்து நொறுக்கி இருக்கிறார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா, 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விஹாரி 111 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம் இது. அந்த சதத்தை மறைந்த தமது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.

தொடக்கத்தில் சரிவு

தொடக்கத்தில் சரிவு

கோலி 76 ரன்களும், மயங்க் அகர்வால் 55 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீசின் தொடக்கம் முதலே சரிவை கண்டது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முக்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பி தள்ளி வெளியேறினர்.

இந்தியா டிக்ளேர்

இந்தியா டிக்ளேர்

அதிகபட்சமாக ஹெட்மையர் 34 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்சில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 299 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

210க்கு ஆல் அவுட்

210க்கு ஆல் அவுட்

பின்னர் 468 ரன்கள் என்பது இமாலய இலக்கு. இந்தியாவுக்கே வெற்றி என்று ரசிகர்கள் அப்போதே மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி, 2வது இன்னிங்சை வெஸ்ட் இண்டீசை தொடங்கியது. 3ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 45 ரன்கள் சேர்த்தது. 4வது நாள் ஆட்டத்தில் மீண்டும் தடுமாற்றத்தை சந்தித்தது. இந்திய பவுலிங் அட்டாக்கை எதிர்கொள்ள முடியாமல், 210 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ்.

2க்கு 0 என வெற்றி

2க்கு 0 என வெற்றி

இதன் மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வென்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. முகமது ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சதம் உட்பட மொத்தம் 164 ரன்கள் குவித்த விஹாரி ஆட்ட நாயகனாகனார்.

கேப்டன்சி சாதனை

கேப்டன்சி சாதனை

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை ஈட்டித் தந்த தல தோனியை சாய்த்திருக்கிறார். ஒரு கேப்டனாக கோலி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். 48 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அவர், 28வது வெற்றியை கைப்பற்றி இருக்கிறார்.

தோனி 2ம் இடம்

தோனி 2ம் இடம்

27 வெற்றிகளுடன் இதுவரை சாதனை நாயகனாக வலம் வந்த தல தோனி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி 20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என 3 வகையான போட்டி தொடர்களையும் இந்தியா வென்று சாதனை படைத்திருக்கிறது.

Story first published: Tuesday, September 3, 2019, 10:27 [IST]
Other articles published on Sep 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+