Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சோளமுத்தா… போச்சா..? ஒரு புள்ளியில் தோற்றுப் போன கிங்..! நூலிழையில் முன்னேறிய அந்த வீரர்

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார்.

உலக அளவில் தலை சிறந்த வீரர்களாக வர்ணிக்கப்படுவர்கள் கோலியும், ஸ்டீவ் ஸ்மித்தும். யார் சிறந்தவர் என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் சம அளவிலான பலத்துடன் விளையாடி வந்தாலும், ஒருநாள் போட்டிகளில் கோலியும், டெஸ்டில் ஸ்மித்தும் வெளுத்து வாங்கினர்.

ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்தாண்டு ஸ்மித் மீது விதிக்கப்பட்ட தடைக்கு பின், அந்த இடைத்தை கோலி பிடித்துக் கொண்டார்.

பலத்த போட்டி

பலத்த போட்டி

தொடர்ச்சியாக கோலி முதலிடத்தில் இருந்து வந்தார். டெஸ்ட் தரவரிசையை பொறுத்தவரை கோலி, ஸ்டீவ் ஸ்மித், மற்றொரு ஸ்டார் வீரரான மற்றும் கேன் வில்லியம்சன் இடையேதான் கடும் போட்டி நிலவும்.

தொடர் சதம்

தொடர் சதம்

தற்போது ஓராண்டு தடை முடிந்து மீண்டும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் விளையாடி வருகிறார். ஆஷஸ் தொடரில் 3 இன்னிங்சில் மட்டும் விளையாடி 378 ரன்கள் குவித்தார். தொடர்ச்சியாக சதமடித்து ஆஸ்திரேலிய வெற்றிக்கும் வித்திட்டார்.

தரவரிசை பட்டியல்

தரவரிசை பட்டியல்

இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் கோலியை காட்டிலும் ஒரு புள்ளி அதிகம் பெற்று ஸ்மித் முதலிடம் பிடித்துள்ளார். ஸ்மித் 904 புள்ளிகள் பெற்றுள்ளார். கோலியோ 903 புள்ளிகள் தான் பெற்றிருக்கிறார்.

3 பேர் இந்தியர்

3 பேர் இந்தியர்

வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் புஜாரா 825 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார். மற்றொரு இந்திய வீரரான ரகானே 725 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 வீரர்களில் இந்தியர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.

சதங்கள் எண்ணிக்கை

சதங்கள் எண்ணிக்கை

ஸ்மித் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதம் உட்பட 6,577 ரன்கள் எடுத்து உள்ளார். கோலி 79 போட்டிகளில் விளையாடி 25 சதம் உட்பட 6,749 ரன்கள் எடுத்து உள்ளார்.

முன்னேற முடியும்

முன்னேற முடியும்

இந்தியாவுக்கு அக்டோபர் மாதம் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் தொடருக்காக வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேற முடியும்.

Story first published: Tuesday, September 3, 2019, 18:43 [IST]
Other articles published on Sep 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+