Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதையுமே தேடாதீங்க..! எல்லாம் உள்ள தான் இருக்கு..! அந்த மாதிரி போட்டோ ரிலீஸ் செய்த பிரபல கேப்டன்!!

Recommended Video

Watch Video : Virat kohli releases shirtless photo goes viral

ம்பை: இந்திய கேப்டனான கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளது, சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட்... இதை சொல்லி சொல்லியே இந்திய அணியை கதற வைத்த ரசிகர்கள், பின்னர் தோனி ஓரங்கட்டப்பட்டார், அவர் ஓய்வா என்று இந்திய அணி நிர்வாகத்தை படுத்தி எடுத்துவிட்டனர்.

அதன் பிறகு யாரு பயிற்சியாளர் என்ற விவகாரத்தில் கவனம் செலுத்தி ரவி சாஸ்திரி என்றவுடன் மண்டை காய்ந்து, பிசிசிஐயை இதுவரை இல்லாத அளவுக்கு கழுவி, கழுவி ஊத்தினர். தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர் வந்தது.

கோலி போட்டோ

கோலி போட்டோ

அதில் இந்திய அணி பல சாதனைகளுடன் வென்று உலக கோப்பையில் கோட்டை விட்ட மானத்தை ஓரளவு பெற்றது. அடுத்து தென் ஆப்ரிக்கா தொடர் வருகிறது. அதற்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் இணைய தளத்தில் கேப்டன் கோலி, அரை நிர்வாண (ஜட்டியுடன் என்றே சொல்லலாம்... டக்குனு பார்த்தால் அப்படி தான் தெரிகிறது) போட்டோவை போட்டு அட்ராசிட்டியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

டுவிட்டரில் பதிவு

உள்ளாடையுடன் இருக்கும் போட்டோவை ரிலீஸ் செய்த அவர் அதை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் கோலி கூறியிருப்பதாவது: நமக்குள் இருப்பதை நாம் உன்னித்து கவனிக்க வேண்டும். அது வரையில், வெளியிலிருந்து எதையுமே நாம் தேட வேண்டிய அவசியமில்லை என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் கதை

ரசிகர்களின் கதை

இதை எதற்காக கோலி பதிவிட்டுள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் ரசிகர்கள் லைன்கட்டி கதை, வசனம் திரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த போட்டோ, தமது மனைவியுடன் எங்கோ டூர் போன போது எடுத்த போட்டோ.. அதை தான் எதேச்சையாக ரிலீஸ் செய்துவிட்டார்.

குழப்பமான போட்டோ

குழப்பமான போட்டோ

இல்லை... இல்லை எங்கே ஏதேனும் விழாவில் கலந்து கொண்ட போட்டோவாக இருக்கும். ஒரு நகைச்சுவைக்காக அவர் வெளியிட்டிருக்கலாம் என்று பலவாறாக ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். ஆகையால், இந்த குழப்பத்தை (ரசிகர்களுக்கு இதில் ஏன் குழப்பம் என்றே தெரியவில்லை) போக்கும் வகையில் கோலியே ஏதாவது பதிவிடுவாரா என்று ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

கிண்டல்

கிண்டல்

இன்னும் ஒரு படி மேலே போகும் ரசிகர்கள் வேறு மாதிரி சிந்திக்க தொடங்கி விட்டனர். டிராபிக் போலீசிடம் வசமாக சிக்கி, பைன் கட்டும் அளவுக்கு சென்று அவரது நிலைமை இப்படி ஆகிவிட்டதோ என்று கிண்டல் செய்துள்ளனர். ஒரு வேளை அவர் புதியதாக நடிக்கும் விளம்பர படத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோவாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி இருக்கின்றனர்.

நம்பும் ரசிகர்கள்

நம்பும் ரசிகர்கள்

எப்படி இருந்தாலும் ஏன் கோலி இப்படியொரு போட்டோவை வெளியிட்டார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அந்த குழப்பத்தை அவர் விரைவில் தீர்த்து வைப்பார் என நம்பலாம். ஏக தேசமாக கோலி இதுவரை வெளியிட்ட போட்டோக்களிலேயே இதுதான் அதிக விமர்சனங்களை எதிர் கொண்டது என்று கூறலாம்.

Story first published: Friday, September 6, 2019, 10:50 [IST]
Other articles published on Sep 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+