டி காக்கை காலி செய்த கோலியின் அந்த திட்டம்..!! 2015 உலக கோப்பையிலும் இப்படி தான் நடந்தது ..!!
Recommended Video
சவுதாம்ப்டன்: கோலியின் கேப்டன்சியின் குறித்து சந்தேகம் எழுப்பிய நபர்களுக்கு தமது ஒரேயொரு மூவ் மூலம் பதில் சொல்லி இருக்கிறார் கோலி.
உலக கோப்பை லீக் சுற்றின் 8வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி... அதற்கு 2 காரணங்கள்.. ஒன்று இதுவரை உலக கோப்பையை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது இல்லை.
மற்றொன்று.. முன்னதாக விளையாடிய 2 போட்டிகளில் தோற்று என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் தென் ஆப்ரிக்கா இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்பது தான். தவிர.. முக்கிய வீரர்கள் காயத்தால் விலக.... ஒட்டு மொத்தமாக அதிர்ந்து போயிருக்கிறது தென் ஆப்ரிக்கா.

டாசில் தோற்றது
வழக்கம் போல்... ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் போட்டி தொடங்கியது. டாசில் தோற்றது இந்தியா. அதற்கு பலன் பவுலிங். முதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா வெளுக்க போகிறது என்று தான் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

பவுலிங் யூனிட்
ஆனால்.... நடந்த கதையே வேறு. இந்திய பவுலிங் யூனிட் தென் ஆப்ரிக்காவின் பேட்டிங்கையே ஒட்டு மொத்தமாக சாய்த்தது. அதனை தொடங்கி வைத்தது டெத் பவுலர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா.

முதல் விக்கெட் விழுந்தது
அவர் தொடங்கி வைத்ததை அருமையாக பிடித்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர் அடுத்து வந்த பவுலர்கள். அதில், கேப்டன் கோலியின் கேப்டன்சி ஒரு இடத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல் விக்கெட் விழுந்ததும் தான் அவரின் மூவ் தெரிந்தது.

களத்தில் ஸ்லிப்பர்கள்
உடனடியாக அடுத்த விக்கெட்டை வீழ்த்தினால்.. எதிரணியின் தன்னம்பிக்கையை குலைத்து விட முடியும். 6வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது களத்தில் 2 ஸ்லிப் பீல்டர்கள் தான் நிறுத்தப்பட்டிருந்தனர்.

திட்டம் மாற்றம்
பும்ரா மீண்டும் பந்துவீசும் போது, பீல்டிங் திட்டத்தை மாற்றினார் கோலி. 3வது பந்தை வீசும் போது அதை செயல்படுத்தினார். ஸ்லிப்பில் 2 பேருக்கு பதில் 3 பேரை நிற்க வைத்தார். அதாவது அவரே நின்றார்.

2015ம் ஆண்டிலும் இப்படி தான்
சரியாக அதே இடத்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். இப்போது மட்டுமல்ல... 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போதும் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டி காக். இது தான் கேப்டன்சி... சூப்பர் கோலி. இதை தான் தாதா சவுரவ் கங்குலி சுட்டிக்காட்டி பிரமாதமாக பாராட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications