WATCH: அந்த ஒரேயொரு விஷயம்.. !! பிரபல தமிழ் நடிகருக்கு மெசேஜ் அனுப்பிய கோலி..!! ஏன் தெரியுமா?
Recommended Video
மும்பை: தமிழ் சினிமாவின் பிரபல வாரிசு நடிகரான விக்ரம் பிரபுவின் மகனுக்கு கேப்டன் கோலி, பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் விக்ரம் பிரபு. இவருக்கு அறிமுகம் தேவையில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, கும்கி திரைப்படத்தில் அறிமுகமாகி இவன் வேற மாதிரி, அரிமா நம்பி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது மணிரத்னத்தின் உதவியாளராக இருக்கும் தனசேகரன் இயக்கும் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்கிறார்.

கல்யாணம்
இவருக்கு 2007ம் ஆண்டில், பிரபல தொழிலதிபர் எம்.எஸ். மதிவாணனின் மகள் லட்சுமி உஜ்ஜைனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு விராட் என்ற மகன் உள்ளார். அவரது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது.

கோலி வாழ்த்து
விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார். அது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வீடியோவை பிரபு மற்றும் விக்ரம் பிரபுவின் ரசிகர்கள் வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

டுவிட்டரில் பதிவு
இந்த விடீயோவிற்கு விக்ரம் பிரபுவும் நன்றி தெரிவித்துள்ளார். தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து கோலி அனுப்பிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.

மிக்க நன்றி
உங்களின் தீவிர ரசிகனான எனது மகனுக்காக நேரம் செலவிட்டு வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்து வீடியோ பார்த்து என் மகன் மிகவும் உற்சாகமாகிவிட்டான். அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான வெற்றிக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

காரணம் என்ன?
ஏன் தமிழ் நடிகர் ஒருவரின் மகனுக்கு விராட் மெனக்கெட்டு வாழ்த்து சொல்கிறார் என்று ஆச்சர்யம் எழலாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விக்ரம் பிரபு கோலியின் தீவிர ரசிகர். ஆகையால் மகனுக்கு விராட் என்று பெயர் சூட்டியுள்ளார்.
டுவிட்டர் பதிவு
எனவே அவருக்கு ஸ்பெஷலாக அந்த மெசேஜை கோலி அனுப்பியுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விக்ரம்பிரபு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த மகிழ்ச்சியை விட என் மகனுக்காக அவர் அனுப்பிய இந்த மெசேஜால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.


Click it and Unblock the Notifications