7 வயசு பையங்கிட்ட இந்த கோலி பண்ணின காரியத்தை பாருங்க..! பக்கத்தில் அனுஷ்கா வேற… வைரல் வீடியோ..!
Recommended Video
ஜமைக்கா: 7 வயது நிரம்பிய சிறுவனிடம் கிங் கோலி, ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
உலக கோப்பை தோல்வி, தோனியின் மந்தகதி பேட்டிங் என இந்திய அணியை ரசிகர்கள் கழுவி, கழுவி ஊற்றினர். அதற்கு வட்டியும், முதலுமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அந்த அணியை அடித்து துவைத்து காயப்போட்டிருக்கிறது.
ஒருநாள், டி 20 தொடர்களை கைப்பற்றி இந்தியா அசத்தி இருக்கிறது. அதோடு டெஸ்ட் போட்டிகளிலும் வாகை சூடியிருக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான வெற்றியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றியை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி.

தொடரும் சாதனைகள்
சச்சின், தோனி என ஒவ்வொரு ஸ்டார் வீரர்களின் ரெக்கார்டுகளை பழசாக்கி வருகிறார் கோலி. அதிக சதங்கள், அதிக ரன்கள், அதிக வெற்றிகள் என சாதனைகளையே சரமாரியாக செய்து வருகிறார் கிங் கோலி.

எண்ணிக்கை அதிகம்
தொடர் வெற்றிகள் என்பதால் அவர்களுக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. டுவிட்டர் பக்கத்தில் கோலியை பின்தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

ரசிகர்களிடம் மவுசு
அவருக்கு இருக்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதோ அதே போன்று அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் தான். போகும் இடம் எல்லாம், ரசிகர்கள் சூழ்ந்து கொள்கின்றனர்.
வீடியோ வெளியீடு
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஜமைக்காவில் ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. அதாவது 7 வயது சிறுவனிடம் கோலி ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிறுவனின் காரியம்
அந்த வீடியோவில் கோலியும், மனைவி அனுஷ்கா சர்மாவும் உள்ளனர். அனுஷ்காவுடன் சென்று கொண்டிருந்த கோலியை நோக்கி ஒரு சிறுவன் வருகிறார். அடுத்த சில விநாடிகளில் அந்த சிறுவன் செய்த காரியம் தான் வைரல் ரகம்.

சிறுவனின் ஆட்டோகிராப்
கோலி, அந்த சிறுவன் ஆட்டோ கிராப் போட்டு தரட்டுமா என்று கேட்டிருக்கிறார். ஆனால், கோலியிடம் அந்த சிறுவன் என்னுடைய ஆட்டோகிராப் உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு சிரித்தபடியே கோலியும் வேண்டும் என்று கூறுகிறார். பிறகு அந்த சிறுவனின் ஆட்டோகிராபை வாங்கிச் செல்கிறார்.

வைரல் வீடியோ
அப்போது உடன் இருந்த அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் இதை ரசித்த படி சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications