Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூணாவது அம்பயரே சொன்னாலும் நீ கேக்க மாட்டியே... ஜடேஜாவை வம்பிழுத்த கோலி

மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதைதொடர்ந்த ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கு சமூகவலைதளங்களே பொழுதுபோக்கும் சாதனங்களாக விளங்கி வருகின்றன.

Recommended Video

Technologies that have changed the Cricket

இதனிடையே, தான் கேட்காவிட்டாலும் ரெவ்யூ கேட்டு மூன்றாவது அம்பயருக்கு கேப்டன் விராட் கோலி தொடர்ந்து தொல்லை கொடுப்பார் என்று பௌலர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள விராட் கோலி, மூன்றாவது அம்பயரே கூறினாலும், அதிலும் ஜடேஜாவிற்கு தொடர்ந்து சந்தேகம் இருந்துக்கொண்டே இருக்கும் என்று கலாய்த்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் முடக்கம்

கிரிக்கெட் வீரர்கள் முடக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு சமூக வலைதளங்களே கைகொடுத்து வருகின்றன. குறிப்பாக கேப்டன் விராட் கோலி, தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்தும் தனியாகவும் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் சக வீரர்களை வம்பிழுப்பதிலும் தான் சளைத்தவர் இல்லை என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார்.

ஜடேஜாவை வம்பிழுத்த கோலி

ஜடேஜாவை வம்பிழுத்த கோலி

யுஸ்வேந்திர சஹால் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை அவர்களது போஸ்ட்டுகளுக்காக சமீபத்தில் கலாய்த்திருந்தார் விராட் கோலி. இந்நிலையில் அவரது லிஸ்ட்டில் தற்போது சேர்ந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. மூன்றாவது அம்பயர் மற்றும் அவரது ரெவ்யூ குறித்த ஜடேஜாவின் போஸ்ட்டை வைத்து அவரை கலாய்த்துள்ளார் கோலி.

கடமையை செய்த கோலி

கடமையை செய்த கோலி

இதுகுறித்த ஒரு பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. அதில் தான் மற்றும் கோலி இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் மூன்றாவது அம்பயரின் ரெவ்யூவை கேட்கிறார் கோலி. தான் கேட்காவிட்டாலும் அவர் தன்னுடைய கடமையை செய்ததாக அவர் கலாய்க்க முயன்றுள்ளார் ஜடேஜா.

கலாய்த்த விராட் கோலி

கலாய்த்த விராட் கோலி

இந்த பகிர்விற்கு கமெண்ட் அளித்துள்ள விராட் கோலி, ஜடேஜா எப்பொழுதும் அந்த குறிப்பிட்ட பந்து அவுட் தான் என்று கருதுவார் என்றும் மூன்றாவது அம்பயரின் ரெவ்யூ கிடைத்தாலும் ஜடேஜாவின் சந்தேகம் மாறாது என்றும் அவரை கலாய்த்துள்ளார் விராட் கோலி. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கமே நகைச்சுவையாக மாறியது.

Story first published: Thursday, June 11, 2020, 8:28 [IST]
Other articles published on Jun 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+