Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எம்.எஸ்.தோனியின் ஃபேரவெல் போட்டி.. தேதியை கூறிய சிஎஸ்கே அதிகாரி.. ரசிகர்கள் கவலை!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டி குறித்து அந்த அணியின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் போட்டிகளின் அட்டவணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 28ம் தேதி நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் 16வது சீசன்

ஐபிஎல் 16வது சீசன்

நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து அணிகளுக்கு பிறகு அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளை தங்களது ஹோம் கிரவுண்டில் விளையாடும். இதில் சென்னை ரசிகர்களுக்கு தான் அதிக உற்சாகமே இருக்கிறது. இதற்கு காரணம் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் ஓய்வு பெறுவேன் என அறிவித்தது தான்.

ஃபேரவெல் எப்போது

ஃபேரவெல் எப்போது

இந்நிலையில் தோனியின் ஃபேரவெல் போட்டி குறித்து சிஎஸ்கே அதிகாரி தகவல் கொடுத்துள்ளார். அதாவது மே 14ம் தேதியன்று சேப்பாக்கம் மைதானத்தில் ஃபேரவெல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. லீக் சுற்றில் மே 14ம் தேதியன்று கொல்கத்தாவை சென்னை அணி எதிர்கொள்ளவுள்ளது. இதன் பிறகு சென்னையில் எந்த போட்டியுமே கிடையாது. ஒருவேளை ப்ளே ஆஃப்-க்கு தகுதிப்பெற்றாலும் சென்னையில் போட்டிகள் இருக்காது எனத்தெரிகிறது.

சிறப்பு நிகழ்ச்சிகள்

சிறப்பு நிகழ்ச்சிகள்

எனவே சிஎஸ்கே ப்ளே ஆஃப்-க்கு செல்கிறதோ இல்லையோ மே 14ம் தேதியன்று தோனிக்கு ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று நடத்திவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், தோனியின் கடைசி சீசன் இதுதான். அணி நிர்வாகத்திற்கு அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் அவரின் முடிவு இதுதான். அவரை பிரிவது ரசிகர்களுக்கு கவலையாக தான் இருக்கும் எனக்கூறியுள்ளார்.

பிசிசிஐ-ன் அனுமதி

பிசிசிஐ-ன் அனுமதி

ஐபிஎல் தொடருக்காக இந்த முறை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தோனிக்கு நன்றிகளை தெரிவிக்கவும், அவரின் சாதனைகளை பாராட்டவும் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஏற்பாடுகளுக்கு பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Saturday, February 18, 2023, 22:38 [IST]
Other articles published on Feb 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+