Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர்களால் தான் இந்த வெற்றி சாத்தியம்”.. முதல் டெஸ்டில் பெருமிதம் கொண்ட கோலி.. ரசிகர்கள் உற்சாகம்

செஞ்சூரியன்: இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்னவென்பது குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களை மட்டுமே எடுத்தது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இதனால் 130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 191 ரன்கள் அடித்ததன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு மொத்தம் 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணி 191 ரன்களுக்கு சுருண்டதால் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன் மூலம் செஞ்சூரியன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

கோலி பாராட்டு

கோலி பாராட்டு

இந்த வரலாற்று வெற்றி குறித்து பேசியுள்ள விராட் கோலி, இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் இந்திய அணியின் சிறப்பாக அமைந்தது. இந்த போட்டியில் மட்டுமல்ல கடந்த 2 ஆண்டுகளாகவே அவர்களின் பவுலிங் கூட்டணி, மிகச்சிறப்பான இந்திய அணியை கட்டமைத்துள்ளது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

அயல்நாட்டு களங்களில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது என்பது கடினமான ஒன்று. ஆனால் எதையுமே கருதாமல் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர். நாங்கள் 300 - 320 ரன்கள் வரை தான் சேர்ப்போம் எனத் தெரியும். எனினும் எங்களின் பவுலிங் யூனிட் மீது அதீத நம்பிக்கை இருந்தது. அதன்படியே செய்து கொடுத்தனர்.

உணர முடியும்

உணர முடியும்

மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டம் முழுவதுமே ரத்தானது. இதனை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் இந்திய அணி எப்படி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதை உணர முடியும். இந்த வெற்றியால் அடுத்த போட்டிக்கும் நல்ல நம்பிக்கை கிடைத்துள்ளது என விராட் கோலி பேசியுள்ளார்.

Story first published: Thursday, December 30, 2021, 20:20 [IST]
Other articles published on Dec 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+