For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர் ஷேகன் மதுசங்கா ஹெராயின் வைத்திருந்ததாக பிடிபட்டுள்ளார். அவரை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஹெராயினுடன் பிடிபட்ட மதுசங்கா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

SL cricketer Madushanka Suspended

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய செய்திக்குறிப்பில் கூறுகையில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உடனடியாக ஷேகன் மதுசங்கா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாக அவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் இந்த அவசர முடிவை எடுக்க நேரிட்டதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வாரியம் சார்பிலும் விசாரணை நடத்தப்படவுள்ளது. விசாரணை முடிவுக்கு பின்னர் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும்.

கடந்த 2018ம் ஆண்டு இலங்கை அணிக்காக ஆடினார் மதுசங்கா. இருப்பினும் அதிக போட்டிகளில் அவர் ஆடியதில்லை. ஒரே ஒரு ஒரு நாள் போட்டியிலும், 2 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடியதில்லை.

Story first published: Tuesday, May 26, 2020, 18:04 [IST]
Other articles published on May 26, 2020
English summary
Sri Lanka Cricket Board has suspended Shehan Madushanka after his arrest for having Heroin in his possession
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+