5 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்தது இலங்கை அணி!
மும்பை: இந்தியாவுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.
ஏஞ்சலே மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி மும்பைக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டதால் நிலைமையைச் சரிக்கட்டவும், விட்ட பணத்தை எடுக்கவும் இலங்கையைக் கூப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவே கூப்பிட்டு விட்டதே என்பதற்காக எல்லா வேலையையும் போட்டு விட்டு ஓடி வந்துள்ளது இலங்கை.

5 ஒரு நாள் போட்டிகள்
இரு அணிகளும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.

விராத் கோஹ்லி தலைமையில்
இந்திய அணிக்கு விராத் கோஹ்லி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி கட்டாக்கில்
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நவம்பர் 2ம் தேதி கட்டாக்கில் பகல் இரவுப் போட்டியாக நடைபெறுகிறது.

அகமதாபாத்தில் 2வது போட்டி
அகமதாபாத்தில் நவம்பர் 6ம் தேதி இரண்டாவது ஒரு நாள் போட்டியும், ஹைதராபாத்தில் நவம்பர் 9ம் தேதி 3வது போட்டியும் நடைபெறும்.

நவம்பர் 13ல் நான்காவது போட்டி
நான்காவது ஒரு நாள் போட்டி நவம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். கடைசி ஒரு நாள் போட்டி ராஞ்சியில், நவம்பர் 16ம் தேதி நடைபெறும்.

மாத்யூஸ் தலைமையில் இலங்கை
இலங்கை அணிக்கு ஏஞ்செலோ மாத்யூஸ் தலைமை தாங்குகிறார். இளம் வீரர்கள் நிறைந்த அணியாக இலங்கை வந்துள்ளது.


Click it and Unblock the Notifications