3வது யூத் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை முன்னிலை!
கொழும்பு: இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு எதிரான யூத் ஒருதினப் போட்டித் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியின் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருதினப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.
இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 213 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கை யு19 அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் பவன் ஷா 77 ரன்களை எடுத்தார். கடைசி 6 பந்துகளில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்தது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
Story first published: Monday, August 6, 2018, 10:58 [IST]
Other articles published on Aug 6, 2018


Click it and Unblock the Notifications