Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது டி20 போட்டியில் களமிறங்கும் ஆப்கான்.. இலங்கைக்கு ஷாக் கொடுத்த முகமது நபி.. யாருக்கு வாய்ப்பு?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

Recommended Video

Asia Cup 2022: BCCI Book செய்த Palm Jumeirah Resort! | Aanee's Appeal | *Cricket

துபாயில் கடைசியாக நடைபெற்ற 10 டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

2வதாக போட்டிங் செய்யும் அணி, 9 டி20 போட்டியில் வென்று இருக்கிறது. இதனால், டாஸ் பெரும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

இலங்கை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டாலும், நடப்பாண்டில் விளையாடிய 11 டி20 போட்டியில் 2 போட்டியில் மட்டுமே வென்று இருக்கிறது. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் விளையாடிய 3 டி20 தொடரில் அயர்லாந்துக்கு எதிராக மட்டும் தான் தோல்வியை தழுவியது.

டாஸ்

டாஸ்

இந்த நிலையில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி, பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். இங்கு கிரிக்கெட் நடந்து ரொம்ப நாளாக ஆகிறது. இதனால் ஆடுகளம் புதுசாக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எங்கள் அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். வெற்றி பெற முயற்சிப்போம் என்று கூறினார்.

அறிமுகம்

அறிமுகம்

இதனைத் தொடர்ந்து பேசிய இலங்கை அணி கேப்டன் ஷனாகா, நாங்களும் டாஸ் வென்று பந்துவீச தான் நினைத்தோம். பதிரத்னா மற்றும் தில்சான் மதுசனகா ஆகியோர் இன்று அறிமுக போட்டியில் விளையாடுகின்றனர். இந்த ஆட்டத்தில் 6 பேட்ஸ்மேன்கள், 2 ஆல் ரவுண்டர்கள் மற்றும் 3 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதாக ஷனாகா கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தான் - 1, ஹஸ்ரத்துல்லா ஷசாய், 2, குர்பாஷ், 3, இப்ராஹிம் சாட்ரான், 4, கரிம் ஜன்னட், 5, நஜிபுல் சர்தான், 6, முகமது நபி, 7, ஓமர்சாய், 8, ரஷித் கான், 9, நவீன் உல் ஹக், 10, முஜிபுர் ரஹ்மான், 11, ஃபசல் ஃபரூக்கி

இலங்கை - 1, குணதிலகா, 2, நிசாங்கா, 3, அசலங்கா, 4, பனுகா ராஜபக்சா, 5, குசேல் மெண்டிஸ், 6, ஷனாகா, 7, ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பதிரனா, 10,, மகிஷ் தீக்சணா, 11, தில்சான் மதுசனகா

Story first published: Saturday, August 27, 2022, 19:34 [IST]
Other articles published on Aug 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+