AFG vs SL: ஒரே ஓவரில் 5 சிக்சர்.. கடைசி ஓவரில் 32 ரன்கள்.. ஆப்கான் வீரர் முகமது நபி அபாரம்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி அசத்தினார். அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். செதுக்குல்லா அட்டல் 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 26 ரன்கள் சேர்த்தது. கரீம் ஜன்னத் 1 ரன்னில் வெளியேற, தர்வேஸ் ரசூலி ஒன்பது ரன்களிலும் ஆட்டமிழ்ந்தனர்.

அந்த அணியின் இப்ராஹிம் சாட்ரன் பொறுப்பான ஆட்டத்தை விளையாடி 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்களை தொடவே கஷ்டப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் அனைத்துமே தலைக்கீழ் மாறியது. அந்த அணியின் நட்சத்திர வீரரான முஹம்மத் நபி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கடைசி ஓவரை இலங்கை வீரர் வெல்லாலகே வீசினார்.
அப்போது முஹம்மது நபி தொடர்ந்து சிக்ஸர்களை அடித்து அசத்தினார். முதல் பந்தில் சிக்ஸ், இரண்டாவது பதில் சிக்ஸ், மூன்றாவது பதில் சிக்ஸ் என ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு புத்துயிர் அளித்தார். இதை அடுத்து நான்காவது பந்து வைடு பந்தாக மாறியது. இதனை அடுத்து மீண்டும் நான்காவது பந்து திரும்ப வீசப்பட்டது.
அதிலும் முகமது நபி சிக்ஸர் அடித்தார். இந்த நிலையில் ஐந்தாவது பந்து வீசப்பட்டது. அதையும் அவர் சிக்ஸர் அடிக்க ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். இதனால் ஆறாவது பந்தும் சிக்ஸர் அடித்து யுவராஜ் சிங் சாதனையை முஹம்மது நபி சமன் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆறாவது பந்தை எதை நோக்கி காத்திருந்தனர். ஆனால் ஆறாவது பந்தில் அவரால் சிக்சர் அடிக்க முடியவில்லை. இந்த தருணத்தில் இரண்டாவது ரன் ஓடும் போது அவர் ரன் அவுட் ஆனார். இதன் காரணமாக கடைசி ஓவரில் முஹம்மது நபி 5 சிக்ஸர்கள் அடிக்க ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி அணி ஸ்கோர் 169 ரன்கள் என்ற அளவில் இருந்தது.


Click it and Unblock the Notifications