Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs AFG: வாழ்வா சாவா போட்டியில் ஆப்கானிஸ்தான்.. டாசில் ரஷித் எடுத்த முக்கிய முடிவு.. பதற்றத்தில் வங்கதேசம்

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமான இன்று பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. ஏ பிரிவில் ஏற்கனவே இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதி பெற்றுள்ள நிலையில், பி பிரிவில் இன்னும் எந்த அணியும் தகுதி பெறவில்லை.

இந்த தருணத்தில் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் மோதும் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை இலங்கை அணி வெற்றி பெற்றால் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

SL vs AFG

ஒரு வேலை இந்த ஆட்டத்தில் இலங்கை அணி மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினால் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெரும். இந்த தருணத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரசித் கான், முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பேட்டிங் செதுய்து ரன்களை குவிக்க நினைக்கின்றோம். நாங்கள் என் அனைத்து திட்டங்களையும் சிம்பிளாக வைத்திருக்கின்றோம். சரியான விஷயத்தை செய்தால் நிச்சயம் நெருக்கடியான இந்த போட்டியில் வெற்றி பெறலாம் இந்த போட்டிக்கு ஒரு புதிய ஆடு களத்தை அமைத்திருக்கிறார்கள்.

இந்த ஆடுகளம் எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அல்லா ககான்பார் மற்றும் நயிப் ஆகியோருக்கு பதில் ரசூல் ஆகியோர் அணிக்கு திரும்பிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய இலங்கை அணி கேப்டன் அசலங்கா, நாங்களும் முதலில் டாஸ் வென்று இருந்தால் பேட்டிங் தான் செய்திருப்போம். எங்கள் அணியில் முதல் இரண்டு தொடக்க வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைகிறது. இதேபோன்று எங்களுடைய நடுவரிசை வீரர்களும் பேட்டிங்கில் முன்னேற்றத்தை காண வேண்டும் என்று நினைக்கின்றோம். இன்று எங்களது அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தீக்ஷனாவுக்கு பதில் வெல்லலேகா திரும்பியுள்ளார் என்று அசலங்கா கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 18, 2025, 19:48 [IST]
Other articles published on Sep 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+