For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஃப்கானிஸ்தான் தோல்வி.. ஆனால் வென்றது கிரிக்கெட் தான்.. 242 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நபி - ஓமர்சாய்

பாலக்கல்லே : இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது நபி மற்ரும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் இருவரும் அதிரடி சதம் விளாசியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்களை குவித்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நிஷாங்கா 139 பந்துகளில் 8 சிக்ஸ், 20 ஃபோர்ஸ் உட்பட 210 ரன்களை குவித்தார்.

SL vs AFG : After a fantastic Century by Nabi and Omarzai, Afghanistan lost by 42 runs against Srilanka in the 1st ODI

இதையடுத்து 382 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. கண் மூடி திறப்பதற்குள் குர்பாஸ் 1, ஜத்ரான் 4, ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஷாகிதி தலா 7 ரன்களிலும், குல்புதீன் நைப் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி மோசமான தோல்வியை பெறும் என்று பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி வீரர்களான ஓமர்சாய் - முகமது நபி கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பதோடு, தேவைக்கேற்ப ரன்களும் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. ஒருபக்கம் ஓமர்சாய் நிதானமாக விளையாட, இன்னொரு பக்கம் முகமது நபி அதிரடியாக ரன்களை குவித்தார்.

இதனால் 21 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய முகமது நபி 64 பந்துகளில் அரைசதம் அடிக்க, இன்னொரு பக்கம் பொறுப்புடன் ஆடிய ஓமர்சாய் 56 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின் இருவருமே அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினர். 34.2 ஓவர்களிலேயே ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க, இலங்கை பவுலர்கள் பதற்றமாகினார்கள்.

பின்னர் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரிகள் பறக்க, 105 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதேபோல் மறுமுனையில் நின்ற ஓமர்சாய் சிக்ஸ் அடித்து 89 பந்துகளிலேயே சதமடிக்க, இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை கடந்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு கடைசி 8 ஓவர்களில் 119 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ந்து ஹசரங்கா வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார் நபி.

ஆனால் ரன்களின் பிரஷர் அதிகரிக்க பிரமோத் வீசிய பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து 130 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் தனியாளாக போராடிய அஸ்மதுல்லாவால் இலக்கை எட்ட முடியவில்லை. 50 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் மட்டுமே சேர்த்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சிறப்பாக ஆடிய ஓமர்சாய் 115 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதனால் பலரும் ஆஃப்கானிஸ்தானின் போராட்டத்திற்கு பாராட்டை கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, February 10, 2024, 7:41 [IST]
Other articles published on Feb 10, 2024
English summary
SL vs AFG : After a fantastic Century by Nabi and Omarzai, Afghanistan lost by 42 runs against Srilanka in the 1st ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+