Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை 100 ரன்களுக்கு 1 விக்கெட்.. 10 நிமிசத்துக்கு பிறகு என்ன ஆச்சு தெரியுமா? ஹேசல்வுட் வெறித்தனம்

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்திற்கு நடுவே இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இலங்கை மக்கள் முகத்தில் சிரிப்பை வர வைப்பதற்காக தான் இங்கு வந்துள்ளோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறி இருந்தார்.

Recommended Video

SL vs AUS T20 போட்டியில் மோசமாக ஆடிய Srilanka வீரர்கள் *Cricket

ஆனால் இன்றைய ஆட்டத்தில் இலங்கை பேட்ஸ்மேன்கள் விளையாடியதை பார்த்து , அந்நாட்டு மக்களுக்கு அழுகை தான் வந்திருக்கும்.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இலங்கை அணியின் தொடக்க வீரராக நிசாங்கா மற்றும் குனதிலகா ஆகியோர் களமிறங்கினர். நிசாங்கா முதலில் பொறுமையாக விளையாட, மறுமுனையில் நின்ற குணதிலகா 15 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

100 ரன்களுக்கு 1 விக்கெட்

100 ரன்களுக்கு 1 விக்கெட்

பவர்பிளே முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அசலாங்காவும் நிதானமாக விளையாடினார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 59 ரன்கள் சேர்த்தது. நிசாங்கா 36 ரன்களில் வெளியேறினார். இதனால் 12வது ஓவர் முடிவில் இலங்கை அணி 100 ரன்களை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

இலங்கை பெரிய ஸ்கோர் அடிக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அதன் பிறகு இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஹேசல்வுட் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குசேல் மெண்டிஸ், ராஜபக்சா ஆகியோர் எல்லாம் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர்.

128 ரன்களுக்கு சுருண்டது

128 ரன்களுக்கு சுருண்டது

குறிப்பாக ஹேசல்வுட் வீசிய 14வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறியது. அசலங்கா மட்டும் போராடி 34 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார். அப்போது வீழ்ந்த அணி, அதன் பிறகு எந்திரிக்கவே முடியவில்லை. 100 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி அடுத்த 28 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களில் சுருண்டது. ஹேசல்வுட் 4 ஓவரில் 16 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Wednesday, June 8, 2022, 10:59 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+