Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs AUS: கேகேஆர் அணிக்கு அடித்த ஆப்பு.. ரூ.18 கோடி இலங்கை வீரருக்கு காயம்..போட்டியிலிருந்து விலகல்

SL vs AUS: ஐபிஎல் 2026 தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்தடுத்து பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா அணியால் 18 கோடி ரூபாய்க்கு வாதங்கப்பட்ட பதிரனாவுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்னது. இலங்கை , ஆஸ்திரேலியா இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில், தனது முதல் ஓவரின் மூன்றாவது பந்தை மிட்செல் மார்ஷுக்கு 143 கிமீ/மணி வேகத்தில் பதிரனா வீசினார்.

பந்துவீசி முடித்ததும் காலை பிடித்துக்கொண்டு தரையில் விழுந்தார். அவரால் தொடர்ந்து விளையாட முடியாததால், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். மீதமுள்ள ஓவரை தசுன் ஷனாகா வீச, இச்சம்பவம் இலங்கை அணிக்கு மட்டுமல்லாமல், கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு பெரும் கவலையை அளித்துள்ளது.

{image-SL vs AUS Pathirana injury.jpg tamil.mykhel.com}

பதிரனா காயம்

கேகேஆர் அணி, ஐபிஎல் 2026 ஏலத்தில் பதிரனாவை ₹18 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளை முந்தியது. வங்கதேச இடது கை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானையும் ₹9 கோடிக்கு ஒப்பந்தம் செய்தனர். ஆனால், பிசிசிஐ நிர்வாக முடிவு காரணமாக, கேகேஆர் முஸ்தபிசுர் ரஹ்மானையும் விடுவித்தது. அவருக்கு இதுவரை மாற்று வீரரை அணி ஒப்பந்தம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, ஹர்ஷித் ரானாவும் ஐபிஎல் 2026 தொடரில் பாதியோ அல்லது முழுவதுமாக தவறவிட நேரிடலாம். 2026 டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது ஏற்பட்ட முழங்கால் காயத்திற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 2024 இல் கேகேஆர் அணி கோப்பையை வென்றபோது 19 விக்கெட்டுகளையும், அடுத்த சீசனில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர், அணியின் முக்கிய வீரர் ஆவார்.

கேகேஆருக்கு சிக்கல்

இந்த மூன்று முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், கேகேஆர் அணியின் வேகப்பந்துவீச்சுப் பிரிவு மிகவும் பலவீனமடையும். இளம் வீரர்களான வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி போன்றோர் இன்னும் சர்வதேச தரத்திற்கு உயரவில்லை. உம்ரான் மாலிக் அடிக்கடி காயங்களுக்கு உள்ளாகக்கூடியவர். ஸ்பின்னர்களை விட வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான ஈடன் கார்டன் மைதானத்தில், இது கேகேஆருக்கு மிகப் பெரிய சவாலாக அமையும்.

மதீஷா பதிரனாவின் காயம் பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. சொந்த மண்ணில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் வனிந்து ஹசரங்கா இல்லாததால், இலங்கை அணியும் கவலையில் உள்ளது. ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 2026-ன் இரண்டாம் பாதியில் தொடங்கவிருக்கிறது.

Story first published: Monday, February 16, 2026, 21:56 [IST]
Other articles published on Feb 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+