Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை முந்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்பின்னர்.. 2 பிரம்மாண்ட சாதனைகள் படைத்த நாதன் லியோன்

கல்லே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் உலக அளவில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்தார். மேலும், ரவிச்சந்திரன் அஸ்வினின் இரண்டு சாதனைகளையும் முறியடித்து இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் நாதன் லியோன். அவர் சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

SL vs AUS Nathan Lyon breaks Ravichandran Ashwin records in WTC and Sri Lanka

இதன் மூலம் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் மட்டும் 23 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான பாட் கம்மின்ஸ் சரியாக 200 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவரை முந்தி இருக்கும் நாதன் லியோன் 203 விக்கெட்களுடன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

இந்த பட்டியலில் 200 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்திருக்கிறார் நாதன் லியோன். மேலும், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அஸ்வினையும் முந்தி இருக்கிறார். அஸ்வின் 195 விக்கெட்களை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

அது மட்டும் இன்றி இலங்கை மண்ணில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்திலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வினை முந்தி இருக்கிறார் நாதன் லியோன். இதற்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின் இலங்கை மண்ணில் 38 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் 38 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருந்தார். இவர்கள் இருவரின் சாதனையையும் நாதன் லியோன் முறியடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் ஷேன் வார்னே 37 விக்கெட்களுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தானில் யாசிர் ஷா 33 விக்கெட்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Saturday, February 1, 2025, 17:06 [IST]
Other articles published on Feb 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+