Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs BAN: 15 ஓவருக்குள் இலங்கை அணி வெற்றி.. வங்கதேசத்தை வீழ்த்தி அபாரம்

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். லிட்டன் தாஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, தவ்ஹீத் ஹிர்தாய் 8 ரன்களில் வெளியேறினார். மெஹதி ஹசன் ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார்.

SL vs Ban

இதனால் வங்கதேச அணி 53 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் ஜேக்கர் அலி 34 பந்துகளில் 41 ரன்களும், 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து அணியை கௌரவமான இலக்கை எட்ட உதவினர். இதன் காரணமாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய நிஷாங்கா 34 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் மூன்று ரன்களில் வெளியேறினார். குசல் மெண்டீஸ் ஒன்பது ரன்களிலும், தசன் சனாகா ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இளம் வீரர் காமில் மிஸ்ரா மட்டும் 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்ச்ர்களும் அடங்கும். கேப்டன் ஷனக்கா நான்கு பந்துகளின் 10 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 14.4 ஓவர்கள் எல்லாம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இலங்கை அணி 2.59 என்ற அளவில் ரன் ரேட் இருக்கிறது. முதலிடத்தில் இரண்டு புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. அந்த அணியின் ரன் ரேட்டில் 4.70 என்ற அளவில் இருக்கின்றது.

Story first published: Saturday, September 13, 2025, 23:47 [IST]
Other articles published on Sep 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+