Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs BAN மேட்ச் பார்த்தீங்களா?ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று மாற்றம்..350 எல்லாம் வாய்ப்பில்ல ராஜா

கொழும்பு: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது புதிய விதி வந்திருப்பதன் மூலம் அது நேற்று நடைபெற்ற இலங்கை வங்கதேசத்துக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு முனைக்கு ஒரு பந்து என போட்டி முழுவதும் இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் பவுலர்கள் ரிவர்ஸ்விங் செய்யப்படுவது தடுக்கப்படும். மேலும் புதிய பந்தை வைத்து சுழற் பந்துவீச்சாளர்களும் பந்து வீச சிரமப்படுவார்கள்.

SL vs Ban

இதை வைத்துக்கொண்டு பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து 350 ரன்கள், 400 ரன்கள் என அடித்து வந்து அசத்தினார்கள். ஆனால் இது ஒரு நாள் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் குறைத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி இருந்தனர். இந்த இரண்டு பந்து முறையை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில் ஐசிசி ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி 35 ஓவர் வரை ஒரு மணிக்கு ஒரு பந்து என இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படும். 36 வது ஓவரிலிருந்து 50-வது ஓவர் வரை ஏதேனும் ஒரு பந்து தான் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கடைசி கட்டத்தில் பவுலர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் இந்த விதி முதல் முறையாக இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிகை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்க இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா மதுசங்கா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

கமிண்டூ மெண்டீஸ் மட்டும் பொறுப்பாக விளையாடிய 45 ரன்கள் எடுத்தார். அதே போன்று கேப்டன் அஸ்லங்கா 106 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 49.2 ஓவரில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி இந்த இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீரர் பர்வேஸ் 13 ரன்களிலும், டன்ஷித் ஹசன் 62 ரன்களிலும், நஜ்முல் உசைன் 23 ரன்களும் எடுக்க நடுவரிசை வீரர்கள் லிட்டன் தாஸ் டக் அவுட் ஆனார். தவ்ஹீத் ஹிர்தாய், மகதி ஹசன் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், ஜேக்கர் அலி மட்டும் தனியாலாக போராடி 51 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதனால் 35.5 ஓவர்கள் எல்லாம் வங்கதேச அணி 167 ரன்கள் ஆட்டம் இழந்தது. இலங்கை வீரர் ஹசரங்கா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். 35 வது ஓவக்கு பிறகு ஒரு பந்து தான் பயன்படுத்தப்படும் என்ற விதி மாற்றப்பட்ட நிலையில் பௌலர்கள் இந்த ஆட்டத்தில் ஜொலித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் பழைய மாதிரி விறுவிறுப்பாக மாறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, July 3, 2025, 16:24 [IST]
Other articles published on Jul 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+