Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணியில் ஃபில்டிங் நின்ற இந்திய வீரரின் மகன்.. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ருசிகரம்

மான்செஸ்டர் : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தது.

இதை அடுத்து இரண்டாவது நாள் மழையின் காரணமாக தாமதமாகி இருக்கிறது இந்த நிலையில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து அணிக்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் ஒருவர் பில்டிங் நின்று கொண்டிருந்தார்.

Eng vs sl England vs srilanka

இதை பார்த்தவுடன் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.அது யார் என்னவென்று தற்போது பார்க்கலாம். இங்கிலாந்து அணியின் 12th மேனாக ஹாரிஸ் என்ற வீரர் பில்டிங் நின்று கொண்டிருந்தார். இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி. சிங்கின் மகன் ஆவார். ஆர் பி சிங் என்றவுடன் 2007 டி20 உலக கோப்பையில் ஸ்ரீசாந்த் உடன் விளையாடிய ஆர்பி சிங் என்று நினைத்து விட வேண்டாம்.

இது வேறு ஆர்பி சிங். அவர் இந்திய அணிக்காக 1986 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு ஒரு நாள் போட்டிகளில் கபில்தேவ் உடன் ஆர் பி சிங் பந்து வீசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 59 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆர்பி சிங் பேட்டிங்கில் 1413 ரண்களும் பந்துவீச்சு 150 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

ஆர் பி சி ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்துக்கு சென்று அங்கு பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறார். லாங்சைர் கிரிக்கெட் கிளப்பில் பணிபுரிந்து வந்த ஆர்பி சிங்கின் மகன் ஹாரி சிங், தற்போது லாங்சையர் அணிக்காக விளையாடுகிறார். 7 போட்டிகளில் இதுவரை லாங்சையர் அணிக்காக விளையாடி வரும் ஹாரிஸ் இன்னும் தனது முழு திறனை காட்ட வில்லை.

7 போட்டிகளில் 87 ரன்கள் அடித்திருக்கிறார். பந்து வீச்சில் மொத்தம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஹாரி சிங் இங்கிலாந்து அண்டர் 19 அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹாரி சிங் தாம் நான்கு வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். லாங்சையர் நிர்வாகம் தான் எனக்கு உதவி செய்து வருகிறது. அவர்களுடைய கிரிக்கெட் அகாடமியில் நான் இணைந்து தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 22, 2024, 17:50 [IST]
Other articles published on Aug 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+