Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்.. இன்னும் 1 வாய்ப்பு கிடைத்தால் போதும்.. ரெக்கார்ட் லோடிங்

மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் வீரர் என்றால் ஜோ ரூட் தான். விராட் கோலி எப்படி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனக்கென்று, ஒரு தனி இடத்தை பிடித்தாரோ தற்போது ஜோரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக ரன்களை சேர்த்து முன்னேறி வருகிறார்.

ஜோ ரூட் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 146 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,402 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 34 சதம், 64 அரைசதம் அடங்கும். 33 வயதான ஜோ ரூட்,சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேகத்தில் ஜோ ரூட், ரன்கள் அடித்தால் சச்சினின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

sl vs eng srilanka vs england cricket

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 375 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு சதங்கள் அடங்கும். இந்த தொடரில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த ஆறாவது வீரர் என்ற பெருமையை ரூட் பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்காக அதிக சதம் அடித்த வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் போன்ற பெருமையை ஜோ ரூட் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்திருக்கிறார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற பட்டியலில் ஜோ ரூட் தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோரை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

தற்போது ஜோ ரூட் ஐந்து முறை வென்று சச்சின் டெண்டுல்கரின் தொடர் நாயகன் சாதனையை சமன் செய்து இருக்கிறார். இன்னும் ஒரு தொடரில் ஜோ ரூட், தொடர் நாயகன் விருது வென்றால் சச்சினின் சாதனையை முறியடித்து விடுவார். இந்த பட்டியலில் அதிக முறை தொடர் நாயகன் விருது வாங்கி வென்றவர்கள் என்ற சாதனையை இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பெற்றிருக்கிறார். அவர் இதுவரை 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக அஸ்வின் பத்து முறையும், காலிஸ் ஒன்பது முறையும் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார்கள். அதன் பிறகு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் எட்டு முறையும், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹார்ட்லி , ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷான் வார்னே எட்டு முறையும் தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வசிம் அக்ரம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சிவ்நரைன் சந்திரபால் தலா ஏழுமுறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார்கள்.

Story first published: Tuesday, September 10, 2024, 7:00 [IST]
Other articles published on Sep 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+