Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs ENG: சூப்பர் 8 சுற்றில் சாதிக்குமா இலங்கை.. டாசின் போதே 2 சோகம்.. இங்கிலாந்து மிரட்டுமா?

பாலக்கல்லே: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி இன்று பலப்பரிட்சை நடத்துகிறது. சூப்பர் 8 முதல் ஆட்டம் நேற்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற இருந்தது. ஆனால் அந்த போட்டி மழை காரணமாக ரத்தானது.

இந்த சூழலில் பாலக்கல்லேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் இருந்த இலங்கைக்கு ஜிம்பாப்வே தோல்வி ஒரு அதிர்ச்சி வைத்தயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி லீக் சுற்றில் தடுமாறினாலும், சூப்பர் 8 சுற்றில் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். டி20 உலக கோப்பைக்கு முன்பு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முழுமையாக இலங்கையை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சனக்கா முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர், கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக சேஸ் செய்து வருகிறோம். நீங்கள் அணியின் செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் இருக்கிறார்கள். அதே சமயம் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருப்பது அணிக்கு லேசான பாதகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் மாற்று வீரராக வந்திருப்பவர்களும் எங்களுக்காக முன்பு நன்றாக விளையாடுவார்கள் தான். இந்த போட்டியில் நாங்கள் இரண்டு மாற்றங்கள் செய்திருக்கின்றோம்.

ப்ரமோத் மதுசான்க்கு பதிலாக சமீராவும் குசல் பெரேராவுக்கு பதிலாக காமில் மிஸ்ராவும் களமிறங்குகின்றனர் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக், நாங்கள் முதலில் பந்து வீச தான் இருந்தோம். அண்மையில் இலங்கைக்கு எதிராக எங்களுக்கு சிறப்பான ஒரு தொடர் நடந்து முடிந்தது. எனவே சூப்பர் 8 சுற்றில் இருக்கும் சவால்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றோம். முதலில் விளையாடி களசூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு அதற்கு ஏற்ப தங்களை நாங்கள் மாற்றிக் கொள்வோம். எங்கள் அணியின் இந்த மாற்றமும் இல்லை என்று ஹாரிபுரூக் கூறினார்

Story first published: Sunday, February 22, 2026, 14:53 [IST]
Other articles published on Feb 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+