Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்று வெற்றி.. வெறும் 108 ரன் அடித்து விட்டு கெத்தாக ஜெயித்த நியூசிலாந்து.. இலங்கை பரிதாப தோல்வி

தம்புலா: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெறும் 108 ரன்கள் மட்டும் எடுத்து, அதை வைத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் இந்தப் போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ரன் குவிக்க திணறியது. எந்த பேட்ஸ்மானாலும் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி இந்த இலக்கை எளிதாக எட்டி விடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

sl vs nz new zealand sri lanka

ஆனால், நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தார். லாக்கி பெர்குசன் தான் வீசிய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் குசால் பெரேரா விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அடுத்து எட்டாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் கமிந்து மென்டிஸ் மற்றும் சரித் அசலங்கா விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

இதை அடுத்து இலங்கை அணி 7.2 ஓவர்களில் 34 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. துவக்க வீரர் பதும் நிசங்கா மட்டுமே கடைசி வரை களத்தில் நின்று நம்பிக்கை அளித்து வந்தார். அவர் 51 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இலங்கை அணி கடைசி ஓவரில் எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது முதல் பந்தை சந்தித்த தீக்ஷனா ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை சந்தித்த பதும் நிசங்கா ஆட்டம் இழந்தார். அடுத்து மூன்றாவது பந்தை சந்தித்த பதிரானா ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து ஐந்தாவது பந்தில் தீக்ஷனா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கிளென் பிலிப்ஸ் வீசிய கடைசி ஓவரில் நான்கு பந்துகளில் மூன்று விக்கெட்கள் வீழ்ந்தன. இலங்கை அணி 103 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழு உறுப்பினர்களாக இருக்கும் அணிகளிலேயே குறைந்த ரன்கள் அடித்து வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் 2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். மைக்கேல் பிரேஸ்வல் 2 விக்கெட்கள், கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். ஜக்காரி ஃபோக்ஸ் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

Story first published: Monday, November 11, 2024, 8:13 [IST]
Other articles published on Nov 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+